25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பனிக் காலத்தில் சரும வறட்சித் தன்மை தடுக்க….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பனிக் காலத்தில் சரும வறட்சித் தன்மை தடுக்க….

பனிக் காலத்தில், உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். அதிகப்படியான குளிரால், பலருக்கும் சருமம் வறண்டு, முகம் பொலிவின்றி காட்சியளிக்கும். இச்சமயத்தில், நம் முகத்தின் மிருது தன்மை குறையும். 

குளிர்காலத்தில் தான் உங்களின் சருமத்திற்கும், தலை முடிக்கும் அதிககவனம்செலுத்தவேண்டும். இந்நேரத்தில், வெதுவெதுப்பான நீர் மிகவும் நல்லது. 'மாய்சுரைஸர்' சோப்பை பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.

குளிர் காலத்தில், நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் சருமம் வறட்சியாகாமல், ஈரப்பதத்துடன் இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது.மூலிகை தேநீரும், சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கும்.

பிரெஷ் ஆன அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றுடன் பிரக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க, சருமம் வறண்டு போகாது.உதட்டை அடிக்கடி எச்சில் படுத்தாதீர். இப்படி செய்வதால், உதடு காய்த்து போகும். அதற்குபதிலாக தரமான ' லிப் பாம் '  உபயோகிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News