இந்தியா–ஆப்கானிஸ்தான்: 2வது டி20 போட்டி இன்று.
இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
மறுபுறம், தொடரை சமன் செய்யும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்காக போராடும் என்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
0
Leave a Reply