அரசாங்கம் என்ன செய்யும்
எங்க பார்த்தாலும் கட்டுப்பாடு சகிக்கலே I Want to be free. அம்மா, அப்பா. பாட்டி. தாத்தா. சமயம். சமுதாயம். அரசாங்கம். பாடங்கள் எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. இதற்குத்தடா, அதற்குத் தடா என்று தடைகள். நம் வாழ்க்கை தறிகெட்டுப் போகாமல் இருக்க, முன்னோர்கள் செய்த வழிதான் இவை.
குற்றால அருவியிலே மழை நேரம் சாதாரணமாக தண்ணீர் விழும் பொழுது ஆனந்தக் குளியல் போடுகிறோம். அதே அருவியில் வெள்ளப்பெருக்கெடுத்தால் நம்மால் குளிக்க முடியுமா ? முடியாது கட்டுப்பாடில்லாமல் விழும் தண்ணீரில் குளிக்கத் தடைபோடுகின்றனர். நாமும் நமக்குள் இந்த அருவியிலே 'தலை வச்சோம், செத்தோம்' என்று நமக்கு நாமே கட்டப்பாடு செய்து கொள்கிறோம். அதெப்படி ? என்னை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று தலையைக் கொடுத்தால் என்ன ஆகும். டிஸ்கவரி சேனலில் காட்டப்படும் கடலுக்கு அடியில் தான் இருப்போம். இல்லாவிட்டால் மீனுக்கு இரையாகிவிடுவோம்.
ஹெல்மெட் போடுங்கள். அடிக்கடி இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிலும் மண்டையில் அடிபட்டு சாகும் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மெதுவாகச் செல்லுங்கள். வேகத்தை குறையுங்கள், ம்ஹீம் யார் கேட்கிறார்கள். சூர்யா, விஜய், அஜித் , ஸ்டண்ட் சீன்களில் பாதுகாப்பாக கயறு கட்டி வேகமாக ஒட்டுவது போல பாவலாவை நிஜம் என்று நம்பி, நம் வீட்டு பிள்ளைகள் ஸ்டைலாக ஒட்டி,விழுந்து மண்டை உடைந்து இறக்கிறார்கள். இதற்காக அரசாங்கம் திடீரென்று சட்டத்தைக் கொண்டு வந்தது. கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று. ஏன் ? நமக்குத் தெரியாதா ? அரசாங்கம் சொல்லும் வரை நமக்கு மூளை எங்கு சென்றது என்று தெரியவில்லை. உடனே ஹெல்மெட்டை வாங்கிக் குவித்தனர். ஹெல்மெட் வியாரிகளுக்கு சூப்பர் லாட்டரி.
திடீரென்று ஹெல்மெட் போட்டாலும் ஆபத்து வருகிறது. ஹெல்மெட் போடுவதால் கொஞ்சம் காது கேட்பதில்லை. தலைவலி வருகிறது. தரமற்ற ஹெல்மெட்டினால் ஆபத்து கூடுகிறதே ஒழிய குறைவதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் வாதமிட, அரசு சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. எப்படி ? ஹெல்மெட் போட்டுக் கொண்டு மிதவேகத்தில் ஒட்டினால் இந்த லோகத்தில் தொடர்ந்து வாழலாம். இல்லா விட்டால் பரலோகத்தில் உடனே செட்டில் ஆகி விடலாம். என்று தான். என்ன செய்யும் அரசாங்கம்.
கட்டுப்பாடற்ற வாழ்க்கை ஒருக்காலும் சுபமாக இருப்பதில்லை. சாலை விதிகளைக் கூட கடைபிடிப்பதில்லை. கட்டுப்பாடற்ற மனிதர்கள் சாலை நடுவே நின்று நண்பனிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும், (படிக்கும் மாணவர்கள் கூட) காரோ, பஸ்ஸோ, ஹாரன் அடித்தால் திரும்புவதாகத் தெரியவில்லை. அப்படியே திரும்பினாலும் ஒரு முறைப்பு அங்கே இடம் இருக்கில்லா ? ஒதுங்கிப்போ ! என்ற பாவனையுடன், இவர்களே இப்படி என்றால் கிராமப்புற மக்களுக்கு என்ன தெரியும். டிராபிக் ரூல்ஸை, சிக்னலை யாரும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. இந்திய மக்களின் விலை மதிப்பற்ற, உயிரை துச்சமாக அலட்சியப்படுத்துவதால், எத்தனை உயிர்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன.
மக்கள் நடைபாதையில் கடை போடுபவர்கள் தங்கள் வியாபாரத்திற்கு உரிய சாமான்களை சாலை ஓரத்தில் போட்டு வியாபாரம் செய்வது ,மண்ணிக்க முடியாத குற்றம். ஏன் அந்த சாலையில் விபத்து நேர்ந்தால் சாலையோரக் கடைக்காரர்கள் வியாபாரிகள் கூட விபத்திற்கு காரணமாணவர்களேயாவர். அவர்களுக்குக் கூட பாவத்தில் பங்கு உண்டு.
பல தவறுகளை நாம் தெரியாமல் செய்கிறோம். ஆனால் தெரிந்து செய்யும் தவறுகளால் நாம் மன்னிக்க முடியாத குற்றவாளியாக மாறி, இப்பிறப்பிலும்,மறு பிறப்பிலும், நாம் அனுபவித்தே ஆக வேண்டும். ஆகவே நம் முன்னோர்கள் சமயம், சமுதாயம், அரசாங்கம், பாடங்கள், வேதங்கள் சொல்லியவற்றில் உள்ள கருத்துக்கள். கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாமும், நம் நாடும். செழித்து வளர்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.
0
Leave a Reply