கரிசல் இலக்கியத் திருவிழா - 2024 கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் போட்டிகளுக்கு 07.12.2024-க்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் 2-வது கரிசல் இலக்கியத் திருவிழா- 2024 டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் சிவகாசியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்காக, சிறுகதை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட போட்டிக்கான படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாக இருக்க வேண்டும். கரிசல் நிலவியல், வாழ்வியல், பண்பாடு, வழக்காறுகள், தொழில்கள், சமூகங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளாக இருக்க வேண்டும்.இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தில் பயிலும் அனைத்து விதமான கல்லூரி மாணவ/மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
சிறுகதைப் போட்டிக்கான படைப்புகளை டிசம்பர்-07-க்குள் karisalshortstories@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும். புதுக்கவிதைப் போட்டிக்கான படைப்புகளை டிசம்பர்-07-க்குள் karisalkavithai2024@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94874-21826 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.படைப்புகளை அனுப்பும் போது கல்லூரி / பிரிவு / உள்ளிட்ட விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு வேண்டும்.சிறந்த படைப்புகள் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இரண்டு போட்டிகளுக்கும் தனித்தனியாக முதல்பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000/- வழங்கப்படும். சிறந்த 5 கவிதைகளுக்கு ஊக்கப்பரிசு தலா ரூ.2000/- வழங்கப்பட உள்ளது எனவும், இப்போட்டிகளுக்கு 07.12.2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply