ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா
ஜூனியர் கோப்பை ஆசிய ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன.ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஜூனியர் (21 வயது) ஆசியகோப்பைஹாக்கி 10வதுசீசன்நடக்கிறது. 'நடப்புசாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. முடிவில் 'ஏ' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (12 புள்ளி), ஜப்பான் (9), 'பி' பிரிவில் முதலிரண்டு இடத்தை கைப்பற்றிய பாகிஸ்தான் (12), மலேசியா (7) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் தாய்லாந்து (11-0), ஜப்பான் (3-2), சீனதைபே (16-0), தென் கொரியாவை (8-1) இந்தியா வீழ்த்தியது. இதில் கோல் அடித்த இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் (7 கோல்), அராய்ஜீத் சிங் (6), சவுரப் ஆனந்த் (5), தில்ராஜ் சிங் (5), ரோசன் குஜூர் (4), குர் ஜோத் சிங் (3), ரோகித் (3) உள்ளிட்டோர் மீண்டும் கைகொடுத்தால் வெற்றி பெற்று, 7வது முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.
0
Leave a Reply