உலக 'ரேபிட்', 'பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட 5 பேர் பங்கேற்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வரும் டிசம்பர் 26-31 உலக செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக 'ரேபிட்', ''பிளிட்ஸ்' சாம்பியன் ஷிப் தொடர் நடக்கிறது. உலகின் முன்னணி நட்சத்திரங்கள் விளையாடும் இத்தொடரில், இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்கின்றனர்.ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி, துரோணவள்ளி ஹரிகா களமிறங்குகின்றனர்.முதலில் 'ரேபிட்' சுற்றுக்கள் டிசம்பர். 26-28ல் நடக்கும். டிசம்பர் 29 ஓய்வு நாள். பின், டிச.30-31ல் 'பிளிட்ஸ்' சுற்று போட்டிகள் நடத்தப்படும்.
0
Leave a Reply