'எ வாக் ஆன் தி வைல்ட்சைடு' என்ற தீமீல் நடைபெற்ற அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள் 1stday
குஜராத் ஜாம்நகரே கொண்டாட்டத்தில் களைகட்டியது. பிரபலங்களின் அணிவகுப்புடன் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண முன்னோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.அதில் இஷா அம்பானி அணிந்திருந்த 3D எம்பராய்டரி கவுன் டிசைன் நேர்த்தியின் உச்சம் என்றே சொல்லலாம்.இஷா அம்பானி அணிந்திருந்த 3D செர்ரி பூக்களின் தொகுப்பு மற்றும் மக்னோலியா பூக்கள் அப்படியே படந்திருக்க , பூந்தோட்டத்தின் நடுவே தோகையை விரித்தாடும் மயில் நிற்பது போல் 3D பூக்கள் டிசைன்களுக்கு நடுவே மயில் எம்பராய்டரி வைத்து அதை ஹைலைட் செய்யும் விதமாக ஸ்வரோஸ்கி க்ரிஸ்டல் கற்களை பதித்திருந்தது அந்த ஆடை கோடை வசந்தத்தை வரவேற்கும் விதமாக வடிமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அழகு சேர்க்கும் விதமாக ஷால் இருந்தது . மொத்தத்தில் அந்த ஆடைக்கு லக்ஸுரியான தோற்றத்தில் மிளிர்ந்தது .அவர் அந்த ஆடையின் டிசைனிற்கு ஏற்ப பின் புறம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ஆடைக்கு மேலும் அழகு சேர்த்தது. இந்த அழகு கொள்ளா ஆடையை வடிவமைத்தவர் பிரபலங்களின் ஸ்டைலிஸ்டான அனைடா ஸ்ராஃப் அடஜானியா. இஷாவின் தன்னிகரில்லா தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைடா இந்த ஆடையை வடிவமைத்திருக்கிறார். அதற்கு ஏற்ப ஹேர் டூ மற்றும் அணிகலன்களின் தேர்வு super.
அனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள், மணமகனின் விலங்குகள் மீதான அன்பை பிரதிபலிக்கும் வகையில், அனந்த் அம்பானி உருவாக்கிய வனந்தரா-வில் மரங்கள் விலங்குகளுக்கு மத்தியில் நடந்தது. திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் கலந்து கொள்ளும் சில விருந்தினர்களும் வந்தாராவுக்கு வருகை தந்தனர். சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் 'எ வாக் ஆன் தி வைல்ட்சைடு' என்ற தீமீல் நடைபெற்றதுவந்தாராவில் உள்ள விலங்குகள் மீட்பு மையத்தின் சுற்றுப்பயணம், வெளிப்புற வசதியாக இருப்பதால், விருந்தினர்கள் வசதியான காலணிகளை அணியுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஒரு பரிசுப் பெட்டியுடன் சேர்த்து கையால் எழுதப்பட்ட குறிப்பையும் தந்துள்ளனர். அதில், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்கள் திருமணத்துக்கு முந்தைய விழாக்களில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
விருந்தினர்கள் விலங்குகளைச் சுற்றிப் படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிகழ்வுகளில் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கவும், அனுபவிக்கவும், உணவுகளை சுவைக்கவும், போன் பயன்படுத்துவதையும், போட்டோ எடுப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.இதேபோல் நிகழ்ச்சியின் முக்கியமான தருணங்கள் அனைத்தையும், நிகழ்வுக்குப் பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்வதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.இதேபோல் விலங்குகளைச் சுற்றி புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பதைத் தவிர்க்கவும். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விலங்குகள் உள்ள அனைத்து இடத்திலும் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி என ராதிகா மற்றும் அனந்த் குறிப்பில் கையொப்பமிடப்பட்டிருந்தனர்.
வந்தாரா என்பது அனந்த் அம்பானியின் பேரார்வம் கொண்ட விலங்குகள் காப்பகமாகும். வந்தாரா முயற்சியின் கீழ், ஜாம்நகரில் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள 3,000 ஏக்கர் வசதியில் யானைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், முதலைகள் மற்றும் பல வகையான பறவைகள் உட்பட நூற்றுக்கணக்கான விலங்குகள் உள்ளன. தங்கள் இளைய மகன் அனந்த் அம்பானியின் ஜூலை திருமணத்துக்கு முன்பு, ஜாம்நகரில் சில உயர்மட்ட விருந்தினர்களை நீதாவும் முகேஷ் அம்பானியும்வரவேற்றனர்.திருமணத்துக்குமுந்தையவிழாக்களில்மார்க் ஜூகர்பெர்க், பில்கேட்ஸ், தீபிகா பட்குகோன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ரன்வீர் சிங், ஆலியா பட், ரன்பீர் கபூர், அக்ஷய் கண்ணா, ஜான்வி கபூர், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, சாய்னா நேவால், ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, ஆதித்யா ராய் கபூர், ஹர்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, வருண் த்வான், இவான்கா ஷ்ரத்தா கபூர், சைஃப் அலி கான், கரீனா கபூர் கான், நீது கபூர் மற்றும் மாதுரி தீட்சித் உட்பட பலர் இந்த திருமண முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பயணத்திட்டத்தின்படி, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தின் முன்னோட்ட விழாக்களின் 1வது நாள் மாலை, சர்க்யூ டி சோலைல் உட்பட விருந்தினர்களுக்காக பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு வந்த விருந்தினர்களுக்காக ’வந்தாரா நிகழ்ச்சி’ நடைபெற்றது. அதில் விலங்கு இராச்சியத்தின் அழகை பிரதிபளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி இருந்தது. பின்னர் ஒரு கண்கவர் ட்ரோன் ஷோவும் நடத்தப்பட்டது.மாலையின் சிறப்பம்சமாக, இந்தியாவில் முதன்முறையாக இசையமைத்த ரிஹானாவின் சிறப்பு நிகழ்ச்சி இருந்தது, பின் அந்நாளின் இறுதி கொண்டாட்டமாக விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியுடன் திருமண முன்னோட்ட விழாவின் முதல் நாள் சிறப்பாக நிறைவடைந்தது.
0
Leave a Reply