மாவட்ட சமூகநல அலுவலத்தின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான, திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணபிக்கலாம்
2023-2024-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விருதின் பெயர்: திருநங்கையருக்கான முன் மாதிரி விருது
தகுதிகள்:
1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.
2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.
3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
4. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:
1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.
2. உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
3. சுயசரிதை
4. தனியரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்).
5. தனியர் பெற்ற விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம்/விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).
6. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).
7. சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.
8. சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை
9. சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரம்.
10. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று.
11. கையேடு இரண்டு நகல்கள் தமிழில்.
திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 31.01.2024 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
31.01.2024-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
விருதுநகர் மாவட்டம்.
0
Leave a Reply