25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


நல்ல துாக்கத்திற்கு  மெலடோனின் ஹார்மோன் மருந்து
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நல்ல துாக்கத்திற்கு  மெலடோனின் ஹார்மோன் மருந்து

ஆரோக்கியமான வாழ்விற்கு மிக அவசியமானது துாக்கம். நம் உடலில் துாக்கத்தை ஏற்படுத்துவது மெலடோனின் எனும் ஒரு ஹார் மோன். இது பீனியல் சுரப்பியில் இருந்து உற்பத்தி ஆகிறது.இதுவே இரவில் துாக்கத்தையும் பகலிலே விழிப்பையும் தருகிறது. இந்த ஹார்மோன் மூளைக்குள்ளே சென்று மூளையை ஓய்வுகொள்ளச் செய்கிறது. நம் உடலுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரம் சரியாக இயங்குவதற்கு, இது ஒரு முக்கிய காரணி.

ஆனால், இரவு நேரம்அதிக அளவில் மொபைல் போன், லேப்டாப் முதலிய டிஜிட்டல் ஒளிகள் நம் மீது படுவதால் இந்த ஹார்மோ னின் சுரப்பு குறைகிறது. அதனால் பலர் துாக்க மின்மையால் அவதிப்படு கின்றனர். இதைச் சரி செய்வதற்காக மெலடோனின் ஹார்மோனை மாத்திரையாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்து ரைக்கின்றனர். ஆனால், இது எந்த அளவு எடுத்துக்  கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இதுவரை மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகளில் துாங்கச் செல்வதற்கு, 30 நிமிடம் முன்பாக 2 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லப் பட்டு வந்தது. ஆனால்,தற்போது இத்தாலி,சுவீடன், இங்கிலாந்துஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் மொத்தம் 1689 பேர் பங்கேற்றனர். இவர்களுக்குப் பல்வேறு அளவுகளில், பல்வேறு நேரங்களில் மருந்து கொடுக்கப்பட்டது.இறுதியாகத் துாங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்பாக 4 மில்லி கிராம் அளவு இந்த ஹார்மோனை எடுத்துக்கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News