ரவா இட்லி ருசியாக இருக்க...
வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால், கூட்டுக்கறிகள் இறக்கும்போது ,லேசாகத் தூவிவிட்டால், வாசனை கூடுதலாக இருக்கும்.
ரவா இட்லி செய்யும் போது சிறிது சேமியாவை வறுத்து, தயிரில் ஊற வைத்துச் சேர்த்தால் கூடுதல் ருசி தரும்.
கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்.
சாம்பார் தண்ணீராக இருந்தால் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.
தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்து விட்டு பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.
வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு,கறிவேப்பிலை சேர்த்தால் கொஞ்சம் வாசனையாக இருக்கும்.
0
Leave a Reply