வறுத்த புழுங்கல் அரிசி மாவு
வறுத்த புழுங்கல் அரிசியைமாவாக்கி வைத்துக்கொண்டால்,கூட்டுக்கறிகள் இறக்கும்போதுலேசாகத் தூவிவிட்டால், வாசனைகூடுதலாக இருக்கும்.
ரவா இட்லி செய்யும் போது சிறிது சேமியாவை வறுத்து, தயிரில் ஊற வைத்துச் சேர்த்தால் கூடுதல் ருசி தரும்.
கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்யும்போது ஒரு கப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை, சிறிது சேர்த்து அரைத்தால் , தோசை மிருதுவாக இருக்கும்.
சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன், சுவையும் கூடுதலாக இருக்கும்.
0
Leave a Reply