இட்லி மிகுந்துவிட்டால் ருசியான பொங்கலாக மாற்றலாம்
ஆறு இட்லி இருந்தால், அரை கப் பாசிப்பருப்பைக் குக்கரில் வேகவைக்கவும். இட்லிகளை வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி4, கீறிய பச்சை மிளகாய்2, அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் ஒன்றிரண்டாகத் தட்டிய மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்த இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்; பின்னர், வேகவைத்த பாசிப்பருப்பு, கால் டீ ஸ்பூன் உப்பு(இட்லியில் ஏற்கெனவே உப்பு உள்ளதால் சிறிதளவு போதும்) சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், அரைஅங்குல நீலமுள்ள இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்கலாம் .ருசியான இட்லி பொங்கல்
0
Leave a Reply