குதிரைத்திறன் எப்படி வந்தது
ஐரோப்பாவில் முன்பு இயந்திரங்களை இயக்க குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. நவீன நீராவி இன்ஜின்கள் வந்தபோது அவற்றின் திறன்களை கூற, ஒப்பீட்டளவில் குதிரையின் ஆற்றலோடு சமன்படுத்திக் கூறப்பட்டது. அதுவே மாறி'குதிரை சக்தி' என ஆனது. இதை அறிமுகப்படுத்தியவர் ஸ்காட்லாந்தின் ஜேம்ஸ் வாட். இவர் தயாரித்த நீராவி இன்ஜினை விற்பனை செய்யும்போது, அந்த இன்ஜின் எத்தனை குதிரைகள் செய்யும் வேலைக்கு சமமானது என எடுத்துக்கூறி விற்பனை செய்ய வேண்டியிருந்தது. இப்படிதான் இன்ஜின்களின் ஆற்றல் குதிரை திறனில் அளவிடப்படுகிறது.
0
Leave a Reply