பாசிப்பருப்பில் புழு வராமல் இருக்க....
தக்காளி சாதம் கிளறும்போது பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை அரைத்துவிட்டுச் செய்தால் சுவையாக இருக்கும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு விட்டால் தக்காளி சாதம், பிரியாணி போல் வாசனையாக இருக்கும்.
பாலுடன் இரண்டொரு நெல்மணி களைப் போட்டு வைத்தால் காலையில் கறந்தபால் இரவு வரை கெடாமல் இருக்கும் .
தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால், துடைத்துவிட்டு, எண்ணெய் கொட்டிய இடத்தில் கோதுமை தவிட்டினைத் தூவி பெருக்கினால் எண்ணெய் பிசுக்கு இருக்காது.
பாசிப்பருப்பில் புழு வராமல் இருக்க, பருப்பைவாணலியில் வறுத்து. ஆறவைத்து பின் டப்பாக்களில் அடைத்து வைக்கலாம்.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்தோடு வெந்தயத்தையும் சேர்த்து அரைத்தால் உடலுக்கு நல்லது, அந்த மாவைக் கொண்டு தோசை ஊற்றினால், பொன்னிறத்துடன் சுவையாகவும் இருக்கும்.
0
Leave a Reply