25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமையல்

Jun 01, 2024

பீட்ரூட்- வீட் கஞ்சி

தேவையானவை: பீட்ரூட் - கால் கப் (சிறு சதுரமாக வெட்டவும்), சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), தக்காளிச் சாறு - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கோதுமை கஞ்சி மாவு 4 - டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  கோதுமை கஞ்சி மாவு செய்ய: முழு சம்பா கோதுமை - கால் கிலோ, எள் - 50 கிராம், பொட்டுக்கடலை 150 கிராம் (கோதுமை, எள்ளை - வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு, நீண்ட நாள் பயன்படுத்தலாம்.செய்முறை: சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும். 4 டேபிள்ஸ்பூன் கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி, வெந்த பீட்ரூட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.  

Jun 01, 2024

கம்பு கேப்பங்கஞ்சி

தேவையானவை: கேழ்வரகு மாவு ஒரு கப், கம்பு மாவு - - அரை கப், அரிசி நொய் அரை கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், கடைந்த தயிர் - அரை கப், உப்பு தேவைக்கேற்ப.  செய்முறை: கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும். மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும். அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு   சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.  

Jun 01, 2024

சீரகம் - புழுங்கல் அரிசி கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 25 கிராம், தயிர் - ஒரு கப் (கடைந்தது), உப்பு - தேவையான அளவு,செய்முறை: புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால் நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.   

May 25, 2024

காலிஃப்ளவர் சூப்

தேவையானவை: நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர்-ஒரு கப், காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது), பால் ஒரு கப் , மிளகுத்தூள் - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று,பூண்டு - 5 பல், நெய் அல்லது வெண்ணெய் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப. - செய்முறை: காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள்தூவிக்கொள்ளலாம்.  

May 25, 2024

வெண்டைக்காய் சூப்

தேவையானவை: வெண்டைக்காய் - 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி,பெரிய வெங்காயம் - தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, காராபூந்தி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு நீர் - 2 கப் (பருப்பை வேகவைத்து வடித்த நீர்), சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: வெண்டைக்காயைநறுக்கி, வெறும் கடாயில் வதக்கவும் (காயில் உள்ள வழவழப்பு நீங்கும்). வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை வதக்கி, வெண்டைக்காயை சேர்க்கவும். இதனுடன் பருப்பு நீர், மஞ்சள்தூள் சேர்த்து, கொதி வந்ததும் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை தூவவும். மேலும் சுவைகூட்ட, சூப்பை கப்பில் ஊற்றும்போது மேலே காராபூந்தி தூவலாம்.  

May 25, 2024

முருங்கை சூப் 

தேவையானவை: முருங்கைக்காய்- 2 (சதைப் பற்றுள்ளது), மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - ஒன்று, பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு  சிட்டிகை, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: முருங்கைக்காய், உருளைக்கிழங்கை,  நறுக்கி, நீர் விட்டு,குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். முருங்கையின் சதையை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பில் ஒன்றரை கப் நீர் ஊற்றி, குக்கரில் வேகவிட்டு மசித்து, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பருப்பு நீரில் மசித்த உருளைக்கிழங்கு, முருங்கை சதைப்பகுதியை போட்டு கரைக்கவும். இந்தக் கரைசலை வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சூப் செய்யும்போது, எப்போதும் மிதமான தீயிலேயே செய்யவும். நடுநடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 

May 25, 2024

ஹெர்பல் சூப்

தேவையானவை: துளசி இலை அரை கப், வெற்றிலை 4, கற்பூரவல்லி இலை - 2, புதினா இலை - கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டுப் பல் - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைவதக்கவும். எல்லா இலைகளையும் சுத்தமாகக் கழுவி இதனுடன் சேர்த்து வதக்கவும். இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பரிமாறும்போது சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.  

May 25, 2024

சைனீஸ் வெஜ் சூப்

தேவையானவை: பீன்ஸ் 50 கிராம், கேரட் - ஒன்று, முட்டைகோஸ் 100 கிராம், - வெங்காயத்தாள் - ஒன்று, அஜினமோட்டோ - அரை டீஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.செய்முறை: அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக்குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து.அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.  

May 18, 2024

மாம்பழ அல்வா

தேவையானவை: மாம்பழக்கூழ் ஒரு கப், சர்க்கரை ஒன்றரை கப், நெய் - கால் கப். பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பாதாம் (தேவைப் பட்டால்) - சிறிதளவு.செய்முறை: அடி கனமான கடாயை சூடாக்கி, மாம்பழக்கூழ். சர்க்கரையைப் போட்டுக் கலந்து கிளறவும். நன்றாக இறுகி வரும்போது மாவுகளை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி, நெய்யை அடிக்கடி விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கி முந்திரி, பாதாமை வறுத்துப் போடவும். 

May 18, 2024

தேங்காய் கோவா அல்வா

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பால், சர்க்கரை தலா அரை கப், கோவா, நெய் - தலா கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை தேங்காய் துருவலை பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் தேங்காய் பால் விழுதைக் கொட்டி மிதமான தீயில் கிளறவும், சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கெட்டியாகும் பதத்தில் நெய் சேர்த்துக் கிளறி பாதாம், முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து தூவவும்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 24 25

AD's



More News