புதினா - இஞ்சி ரசம்
தேவையான பொருட்கள் : புதினா (ஆய்ந்தது) கால் கப், இஞ்சி ஓர் அங்குலத் துண்டு (10 கிராம்), மோர் - 3 கப், கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும். பிறகு கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து, பாத்திரத்தில் உள்ள புதினா - மோர் கலவையில் சேர்க்கவும்.
மோர் கலவையை அடுப்பில் வைக்க வேண்டாம்.
0
Leave a Reply