தேவையான பொருட்கள் வாழைப் பழம் – 5 சர்க்கரை – ¼ கப் நெய் – 1/2 கப்,ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1/4 கப் முந்திரி – தேவையான அளவு உலர் திராட்சை – தேவையான அளவு செய்முறை-முதலில் பாத்திரத்தில் நெய் தடவி தனியாக வைக்கவும். அதன் பிறகு, ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் விட்டு சூடாக்கி அதனுடன் மசித்த வாழைப் பழம் சேர்க்கவும். பிறகு,அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கலவை கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.கலவை திரண்டு வரும் வரை வேக வைக்கவும். பிறகு இன்னொரு பானில் சர்க்கரை எடுத்து அதில் நீர் சேர்த்து சர்க்கரை பாகு செய்யவும். அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, வேறொரு பானில் நெய் சேர்த்து சூடாக்கி, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை வறுக்கவும். பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அல்வாவில் சேர்க்கவும். கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறினால் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.
கோடை வெப்பத்தில் இருந்து, உடலை தற்காத்து கொள்ள மோர் உள்ளது. மசாலா பொருட்கள் நிறைந்த மோரை குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி தரும் மசாலா நீர் மோர் செய்ய கெட்டியான புளித்த தயிர், மூன்று கொத்து பச்சை கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு. மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சேர்த்துக் கொள்ளவும். அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்த பின்னர் ஒரு லிட்டர் தண்ணீரை மீண்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயப்பொடியை சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகளை சேர்த்தோ அல்லது காராபூந்தியை சேர்த்தோ சுவையான மசாலா மோரை பருகவும். மோரில்90% நீர்ச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கப் மோரில்8 கிராம் புரதம் உள்ளது..எலும்பை வலுப்படுத்தும்கால்சியம் மோரில் ஏராளமாக உள்ளது. மோரில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. மோரில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன.நோயெதிர்ப்பு, வளர்சிதை மாற்றத்தில்,முக்கிய பங்கு வகிக்கிறது.மோரில்இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும், தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும், பொட்டாசியம் உள்ளது. செரிமான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.மோரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.மோரில் உள்ள கலோரிகள் மற்ற உணவுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்களுக்கும், இருக்கும் எடையை சீராக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற உணவாக உள்ளது.
அடிக்கிற வெயிலுக்கு தண்ணீர் தவிர எது சாப்பிட்டாலும் ருசிக்காதது போலவே தோன்றும். அடுப்படியில் நிறைய நேரம் செலவிடாமல் , வேலையும் எளிதில் முடிய,அதே சமயம் வாய்க்கு ருசியாக ஒரு துவையல், தயிர் பச்சடி ஒன்றையும் செய்துவிட சாப்பாடு நன்கு இறங்கும், ருசியாகவும் இருக்கும், வேலையும் எளிதில் முடிந்து விடும். வெண்டைக்காய் பச்சடிவெண்டைக்காய் 100 கிராம் கெட்டிதயிர் ஒரு கப் தேங்காய் துருவல் 2 ஸ்பூன் பச்சைமிளகாய் 2 பொடிஉப்பு தேவையானது தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெண்டைக்காயை கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிஎண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். தேங்காய் பச்சைமிளகாய் இரண்டையும் அரைத்துஅதிகம் புளிப்பில்லாத தயிரில்கலந்து உப்பு சேர்க்கவும். கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவிவிடவும். பரிமாறுவதற்கு முன்புபொரித்த வெண்டைக்காய்களை தயிர்கலவையில் சேர்த்து பரிமாறவும். ருசியான வெண்டைக்காய் பச்சடி தயார். இதனை துவையல் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
தேவையான பொருட்கள் - கெட்டிதயிர் ஒரு கப் பழுத்தமாம்பழம் 1 தேங்காய் துருவல் 2 ஸ்பூன்பச்சைமிளகாய் 2உப்பு சிறிதுதாளிக்க: கடுகு, கருவேப்பிலை, நல்லெண்ணெய்செய்முறை: மாம்பழத்தை தோல் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் அதிகம் புளிக்காத தயிரில்மாம்பழத் துண்டுகளை கலந்துஉப்பு சேர்த்து கடுகுகருவேப்பிலை தாளித்துக் கொட்டஇனிப்பு புளிப்புடன் சுவையானதயிர் பச்சடி தயார்.
தேவையான பொருட்கள் -ஸ்வீட்கார்ன் 1 கெட்டிதயிர் ஒரு கப் பூண்டுஒரு பல் உப்புதேவையானது தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன் பச்சைமிளகாய் 1சர்க்கரை 1/2 ஸ்பூன்கொத்தமல்லி சிறிதுசெய்முறை: - சோளத்தை உதிர்த்து இரண்டுநிமிடம் வாணலியில் ஒருகை தண்ணீர் தெளித்து வேக விடவும். தேங்காய், பச்சைமிளகாய் இரண்டையும் கொரகொரப்பாக அரைக்கவும். பூண்டை நசுக்கி கொள்ளவும். அதிகம்புளிப்பில்லாத தயிரில் ஸ்வீட் கான் தேங்காய் அரைத்தது உப்பு, சர்க்கரை, நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கலந்துபரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் -குடமிளகாய் ஒன்று சின்னவெங்காயம் 6 தக்காளிஒன்று கெட்டித் தயிர் ஒரு கப் தேங்காய் சிறிதுபச்சைமிளகாய் 1சீரகம் 1/2 ஸ்பூன்உப்புதேவையானதுதாளிக்க :கடுகு உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிது செய்முறை -குடைமிளகாயை விதைகள் நீக்கி பொடியாக நறுக்கவும். தேங்காய், மிளகாய்,சீரகத்தை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கெட்டி தயிரில் தேங்காய் பச்சைமிளகாய் அரைத்த விழுது, உப்பு, நறுக்கிய காய்கள் சேர்த்து கலந்து கடுகு தாளித்துக் கொட்டமிகவும் ருசியான குடைமிளகாய் பச்சடி தயார்.
தேவையான பொருட்கள் -புளிக்காத தயிர் - ஒரு கப், காரபூந்தி - அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்தது) -6, உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் -2 டீஸ்பூன்.செய்முறை - தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சரிசி - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. இஞ்சி -ஒரு துண்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன். உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிது.செய்முறை: பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊறப் போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம். உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், புளிக்காத புது தயிர்ஒரு கப், பால் கால் கப், உப்பு - ருசிக்கேற்ப, மல்லித்தழை சிறிது, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், காராபூந்தி (அ) ஓமப்பொடி (விருப்பத்துக்கேற்ப) சிறிது, எண்ணெய்- தேவையான அளவு, கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: முந்திரிப்பருப்பு 4, பச்சை மிளகாய் சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நைஸாக அரைத்தெடுங்கள். கால் கப் தயிரை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தயிரில் அரைத்த விழுதைக் கலந்து, கடுகு பொரித்து கொட்டுங்கள். சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள். ஒன்றேகால் கப் தயிருடன், பால், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.ஊறிய உளுந்தை மெத்தென்று அரையுங்கள்.. உப்பு சேர்த்து கலந்து, பிறகு வழித்தெடுங்கள்.. எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்து தயிர், பால் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊற விட்டு, ஒரு ட்ரேயில் அடுக்குங்கள் (ஒன்றின் மேல் ஒன்று படாமல்).அரைத்த விழுது கலந்துள்ள தயிரை அதன் மேல் சுற்றிலும் ஊற்றுங்கள். அதன் மேல் காராபூந்தி அல்லது ஓமப்பொடி, துருவிய கேரட், மிளகாய்தூள், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு ஒரு கப், பொடியாக நறுக்கிய கோஸ் ஒரு கப், இஞ்சி -ஒரு துண்டு, பச்சை மிளகாய் 2. கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ். இஞ்சி,மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.