25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சமையல்

May 11, 2024

ஆப்பிள் ஜெல்லி

ஆப்பிள் ஜெல்லி ஒரு ஆப்பிள் ஒரு கிலோ கிராம். பழத்தை நான்காக வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கிவிட்டு 6 கிலோ கிராம் பழத்துண்டை நன்றாக ஆட்டி, அரைக்கிலோ தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ரஸத்தை வடித்துக் கொள்ளவும். ரஸம் எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவு சர்க்கரைஅதில் சேர்த்து இரண்டு எலுமிச்சம் பழங்களையும் பிழிந்துவிட்டு அடுப்பிலேற்றி, மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கிக் கொள்ளலாம்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

May 11, 2024

மார்மலேடு

 நல்ல கொய்யாப் பழங்களாக எடுத்துச் சுமார் இரண்டு மணி நேரம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும், இரண்டு மூன்று தடவை தண்ணீரை மாற்றிப் புதுக் கொதிநீரை விடவும் பிறகு எடுத்துக் குளிரச் செய்த பழங்களைத் தோலோடு துண்டு செய்து விதைகளை மாத்திரம் நீக்கி விடவும். கடைசியாகக் கொதிக்க வைத்த நீரில் ஒரு படி எடுத்து, அதில் அரைக்கிலோ சர்க்கரையைக் கலக்கிப் பாகு தயாரித்து அதில் பழங்களை போட்டுக் கொதிக்க வைக்கவும். இது அரைகிலோ பழத்திற்கு, ஒரு கிலோ பழமானால் ஒரு கிலோ நீரும், ஒரு கிலோ சர்க்கரையும் வேண்டும். மார்மலேடு தயாரானதும் அடுப்பை விட்டு இறக்கிப் பத்திரப்படுத்தவும்.

May 11, 2024

கொய்யாப்  பாலேடு

முதிர்ந்த கனிந்த கொய்யாக் கனியைக் கழுவித் துண்டுகளாக வெட்டி, அதற்கு சரிசமமான நிறைக்குத் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கனி மெதுவானநிலையை  அடைந்தவுடன் மெல்லிய துணியில் வடிகட்டி விதைகளை நீக்க வேண்டும். கொய்யாப் பாலேடு செய்யப் பொதுவாக தேவையான கலவை கொய்யாச்சாறு அரைக்கிலோ, சீனி முக்கால் கிலோ, வெண்ணெய்60 கிராம், சிட்ரிக் அமிலம் ஒரு கிராம், உப்பு அரை தேக்கரண்டி, சிவப்புச் சாயம்,சாயத்தைத் தவிர்த்து மீதியுள்ளவற்றை நன்கு கலந்து கட்டியாக மாறும் வரை சூடாக்க வேண்டும். பின்பு சாயத்தைச் சிறிது தண்ணீரில் கலந்து அதனுடன் சேர்க்க வேண்டும்.பீங்கான் தட்டைக் கழுவி அதன் மேல் இப்படித் தயாரித்த கொய்யா பாலேட்டைப் பரப்பிக் குளிர வைத்துத் துண்டு துண்டாக வெட்டி உண்டால் சுவையாக இருக்கும்.

May 04, 2024

வீகன் வெண்ணிலா மற்றும் பாதாம் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்பாதாம் பால் - 2 கப்வெல்லம் - கால் கப்வெண்ணிலா - 1 டிஸ்பூன்செய்முறைசாஸ்பேன் எடுத்து அதில் பாதாம் பாலை மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். இந்த பால் பொங்கவிட கூடாது. இதில் வெல்லத்தை பொடியாக்கி சேர்க்கவும். வெல்லம் பாலுடன் நன்கு கரைந்தவுடன் அதில் வெண்ணிலா சேர்க்க வேண்டும்.பின்னர் இதை நன்கு குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி ப்ரிட்ஜில் ப்ரீஸ் செய்ய வேண்டும்.அவ்வளவுதான் சுவை மிக்க வெண்ணிலா, பாதாம் பால் ஐஸ்க்ரீம் தயார்

May 04, 2024

வீகன் சாக்லெட், வாழைப்பழம் மற்றும் தேங்காய் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்வாழைப்பழம் - நான்குகொக்கோ பவுடர் - கால் கப்பீநட் பட்டர் (கடலை வெண்ணெய்) - 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் பால் - கால் கப்செய்முறைபீநட் பட்டர், கொக்கோ பவுடர் மற்றும் வாழைப்பழத்தை பிளெண்ட் செய்ய வேண்டும். இந்த கலவையைில் தேங்காய் பால் ஊற்றி கலந்த பின்னர், சுமார் 2 மணி நேரம் வரை ப்ரீஸ் செய்ய வேண்டும். நன்கு கடினமான பின் ஸ்கூப்பாக கோன்களில் வைத்து சாப்பிடலாம்

May 04, 2024

வீகன் பேரிட்சை மற்றும் தேங்காய் பால் ஐஸ்க்ரீம்

தேவையான பொருள்கள்முழு கொழுப்பு தேங்காய் பால் - 1 கேன்பேரிட்சை - 6 முதல் 8 வரைவெண்ணிலா - 1 டிஸ்பூன்உப்பு - தேவைக்கு ஏற்பசெய்முறைஇந்த ஐஸ்க்ரீம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தேங்காய் பாலை ப்ரிடீஜில் குளிர்ச்சியடைய செய்ய வேண்டும். பிளெண்டரில் வைத்து திடமான தேங்காய் பாலில் இருந்து க்ரீமை மட்டும் வெளியே எடுக்கவும்.பேரிட்சை, வெண்ணிலா, உப்பு ஆகியவற்றையும் பிளெண்டரில் சேர்த்து க்ரீம் போன்று அரைக்கவும்.பின்னர் இந்த கலவையை ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி அதை ப்ரீசரில் சில மணி நேரங்கள் குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். அவ்வளவுதான் பின்னர் எடுத்து பரிமாறலாம்

May 04, 2024

எலுமிச்சை இலை இட்லி பொடி

. தேவையான பொருள்கள்:எலுமிச்சை இலை - ஒரு கப்கடலைப் பருப்பு - 50 கிராம்காய்ந்த மிளகாய் - 15பெருங்காய் துண்டு - 3பூண்டு - 8 பல்மல்லி - ஒரு தேக்கரண்டிசீரகம் - கால் தேக்கரண்டிமிளகு - கால் தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுசெய்முறை: வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் எலுமிச்சை இலையை வறுக்கவும். அடுத்து கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம், மல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் தனித்தனியே வறுத்துகொள்ளவும்.மிக்ஸியில் முதலில் மிளகாய், எலுமிச்சை இலையை சேர்த்து நன்றாக பொடித்த பின் கடலைப் பருப்பு, மல்லியை சேர்த்து அரைக்கவும் கடைசியாக, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.கமகமக்கும் வாசனையுடன் மிகவும் சுவையாக இருக்கும் இப்பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்துடன் கலந்து பிசைந்தும் சாப்பிடலாம். 

Apr 27, 2024

பாரம்பரிய SWEET ‘உக்களி’

பாரம்பரிய SWEET ‘உக்களி’தென்இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்புவகை தான் இந்த உக்களி. இது சேலம் மாவட்டத்தில் மிகவும் பிரபலமாகும். உக்களியை திருமண விழாக்களில் பாரம்பரியமாக செய்து பரிமாறுவது அங்கே வழக்கமாகும். அத்தகைய உக்களியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க.தேவையான பொருட்கள்:அரிசி மாவு-1 கப்.தண்ணீர்- 1 ¼ கப்.உப்பு- 1 சிட்டிகை.நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி.நெய்-2 தேக்கரண்டி.முந்திரி-10.வெல்லம்-3/4 கப்.ஏலக்காய்-1 தேக்கரண்டி.பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.செய்முறை விளக்கம்:முதலில் பவுலில்1 கப் அரிசி மாவு,1 சிட்டிகை உப்பு,1¼ கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும்.இப்போது ஃபேனில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்திருக்கும் மாவு ஊற்றி ஒரு10 நிமிடம் பிரட்டினால், மாவு நன்றாக வெந்துவிடும். மாவு வெந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளகையில்எடுத்துதொட்டுப்பார்த்தால் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும்.இப்போது அந்த மாவில்3/4கப் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். வெல்லம் நன்றாக மாவுடன் கலந்ததும்,1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்,1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து10 நிமிடம் பிரட்டிக்கொண்டேயிருந்தால் பூந்தி பூந்தியா வந்துடும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து2 தேக்கரண்டி நெய் ஊற்றி10 முந்திரியை நன்றாக பொன்னிறமாக வறுத்து அதையும் செய்து வைத்திருக்கும் உக்களியுடன் சேர்த்தால் சுவையான உக்களி தயார். வீட்டிலே ஒருமுறை செஞ்சி பாருங்க.  டேஸ்ட்  சுவையாக  இருக்கும்

Apr 27, 2024

Malpua ‘மால்புவா ஸ்வீட்’

மால்புவா இனிப்பு வகை கிழக்கு இந்தியாவிலிருந்து தோன்றியதாகும். பூட்டான், இந்தியா, நேபாள், பங்களாதேஷ் போன்ற இடங்களில் இந்த இனிப்பு மிகவும் பிரபலமாகும். காலையில் பிரேக் பாஸ்டாக டீயுடன் சேர்த்து சாப்பிடலாம், அல்லது சாதாரணமாக இனிப்பு வகையாகவும் உண்ணலாம். இது மிகவும் பழமையான இனிப்பு வகை என்று கூறப்படுகிறது. ஹோலி, ஜென்மாஸ்டமி போன்ற விஷேச நாட்களில் இதை செய்வார்கள். மால்புவா செய்ய தேவையான பொருட்கள்:மைதா -1 கப்.ரவை -1/4கப்.மில்க் பவுடர் -1/2கப்பால் -1/2 கப்.ஏலக்காய் பொடி - தேவையான அளவு.சக்கரை - 1கப்.குங்குமப்பூ - சிறிதளவு.நெய் - தேவையான அளவு.மால்புவா செய்முறை விளக்கம்:முதலில் ஒரு பாத்திரத்தில்1 கப் மைதா, ரவை¼ கப், மில்க் பவுடர்½ கப், ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து பால் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்றாக கலக்கி20 நிமிடம் மூடி வைத்து விடவும்.இப்போது இன்னொரு பாத்திரத்தில்½ கப் சக்கரை, தண்ணீர்½ கப் சேர்த்து நன்றாக சக்கரை கரையும் வரை கிண்டவும். அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.இப்போது அடுப்பில் பேன் வைத்து அதில் நெய்யை ஊற்றிக்கொள்ளவும். ஊற வைத்திருக்கும் மாவை குழிக்கரண்டியில் எடுத்து சிறிதாக ஊற்றி, நன்றாக மாவு பொன்னிறமாக மாறும் வரை வைத்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். பார்ப்பதற்கு பூரி போல இருக்கும். இப்போது இதை செய்து வைத்திருக்கும் சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.கடைசியாக ஒரு தட்டில் ஊற வைத்த ஸ்வீட்டை அடுக்கி அதன் மீது பொடியாக வெட்டி வைத்த பிஸ்தாவை தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மால்புவா தயார். 

Apr 27, 2024

ஜவ்வரிசிஉருண்டை SWEET

. தேவையான பொருட்கள்:  ஜவ்வரிசி - 200 கிராம் ,சுடுநீர் - தேவையான அளவு , உப்பு - 1/4 டீஸ்பூன்,உள்ளே வைப்பதற்கு...  தேங்காய் - 1/4 மூடி ,ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் * சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்சர்க்கரை பாகுவிற்கு... * சர்க்கரை - 200 கிராம் * தண்ணீர் - தேவையான அளவு * ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன் செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு, சுடுநீர் சேர்த்து கரண்டியால் கிளறி, அத்துடன் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். * பின்னர் தேங்காயை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.செய்முறை -துருவிய தேங்காயை கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.  2 மணிநேரம் ஆன பின், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை கையால் லேசாக பிசைந்து, பின் சிறிது ஜவ்வரியை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் ஒரு 6-7 ஜவ்வரிசி உருண்டைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் கல் போன்று இருக்கும்.பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை உள்ளே வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். * அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாகுவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து, சர்க்கரையை கரைத்துக் கொள்ள வேண்டும். * ஜவ்வரிசி வெந்ததும், அந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த ஜவ்வரிசி உருண்டையை பரிமாறும் போது, மேலே சிறிது சர்க்கரை பாகுவை ஊற்றி பரிமாறுங்கள். இப்போது ஜவ்வரிசி உருண்டை தயார்.மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ். 

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 23 24

AD's



More News