சீரகம் - புழுங்கல் அரிசி கஞ்சி
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 25 கிராம், தயிர் - ஒரு கப் (கடைந்தது), உப்பு - தேவையான அளவு,
செய்முறை: புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால் நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.
0
Leave a Reply