பீட்ரூட்- வீட் கஞ்சி
தேவையானவை: பீட்ரூட் - கால் கப் (சிறு சதுரமாக வெட்டவும்), சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), தக்காளிச் சாறு - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கோதுமை கஞ்சி மாவு 4 - டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
கோதுமை கஞ்சி மாவு செய்ய: முழு சம்பா கோதுமை - கால் கிலோ, எள் - 50 கிராம், பொட்டுக்கடலை 150 கிராம் (கோதுமை, எள்ளை - வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு, நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
செய்முறை: சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும். 4 டேபிள்ஸ்பூன் கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். பிறகு சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி, வெந்த பீட்ரூட் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.
0
Leave a Reply