தேவையானவை பொருட்கள் - இட்லி மாவு - 2 கப்.அரைக்க: மல்லித்தழை ஒரு கட்டு. கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புளி - சிறிய உருண்டை. உப்பு தேவையான அளவு, எண்ணெய் 2 டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன். உளுத்தம்பருப்பு எண்ணெய் - 2 டீஸ்பூன். 2 டீஸ்பூன்.செய்முறை: இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக்கொள்ளுங்கள். மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். பிரமாதமான சுவையும் மணமும், இட்லிகளை நிமிடத்தில் காலி செய்ய வைக்கும்.
தேவையான பொருட்கள் - இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு.அரைக்க: இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகாய்தூள் ஒன்றரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.செய்முறை: இட்லி மாவைக் கொண்டு சிறுசிறு இட்லிகளாக ஊற்றிவேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை. மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.
தேவையான பொருட்கள் - இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை -சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) -ஒரு டேபிள்ஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், டேபிள்ஸ்பூன். அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறுசிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு. கறிவேப்பிலை. எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
தேவையான பொருட்கள் - பொடித்த அவல், பால் தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் அரை கப், கலர் சிறிதளவு, முந்திரி, பாதாம் தேவையான அளவு, குங்குமப்பூ சிறிதளவு. செய்முறை: கடாயை காயவைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு, அவலை நன்றாக வறுத்து. மிக்ஸியில் போட்டு பாலை விட்டு நன்றாக அரைக்கவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம் பாகு வந்ததும் அரைத்த விழுதைக் கொட்டி கிளறவும். கலர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள் - அத்திப்பழம், பால், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், தேன் கால் கப், முந்திரி, பாதாம் - தேவையான அளவு.செய்முறை: அத்திப்பழத்தை நறுக்கி, பால் விட்டு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம்பாகு காய்ச்சி, மசித்து வைத்த பழ விழுதை கொட்டி, நெய் விட்டுக் கிளறவும். முந்திரி, பாதாம் சேர்த்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி, தேன் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
தேவையான பொருட்கள் - நறுக்கிய நேந்திரம்பழம், நெய் - தலா ஒரு கப், பால் அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், கலர் - சிறிதளவு. முந்திரி, பாதாம் -தேவையான அளவு.செய்முறை: நறுக்கிய நேந்திரம் பழத்துடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் எடுத்து நன்றாக மசிக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ,இளம் பாகு வந்ததும், மசித்த பழ விழுதைச் சேர்த்து, நெய் விட்டுக் கிளறவும். கலர் முந்திரி, பிஸ்தா சேர்த்து ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள் - கடலை மாவு, சர்க்கரை, நெய், தண்ணீர் தலா ஒரு கப், மில்க்மெய்டு - அரை டின், கேசரி கலர் அரை டீஸ்பூன், வறுத்த பாதம், முந்திரி துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில்கடலை மாவைக் கொட்டி, வாசனை வரும்வரை வறுக்கவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீரைக் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மில்க்மெய்ட், நெய், கலர் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி, பாதாம், முந்திரி தூவி இறக்கவும்.
தேவையானவை பொருட்கள் - கேரட் துருவல்,பீட்ரூட் துருவல், பரங்கிக்காய் துருவல், தேங்காய் துருவல் -தலா அரை கப், கோவா - கால் கப், சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் -சிறிதளவு.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் நெய்யை விட்டு, தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். காய்கறி துருவலைகளைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பாலை ஊற்றி வேக விடவும். கலவை நன்றாக வெந்ததும் கோவா சேர்த்து, சர்க்கரையைத் தூவி கிளறவும். இந்த கலவை ஒட்டாமல் அல்வா பதத்தில் வந்ததும் ஒரு முறை கிளறி இறக்கவும். பாதம். முந்திரி தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள் - இஞ்சி துருவல் - அரை கப். கேரட் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், பால் ஒன்றரை கப். நெய் - அரை கப், கலர் - கால் டீஸ்பூன்.செய்முறை: கேரட், இஞ்சியுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதை அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை வெந்து கொதித்துக் கொண்டிருக்கும் போது சர்க்கரை, நெய், கலர் சேர்த்துக் கிளறி கெட்டியாக ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டாணி - அரை கப்,பெரிய வெங்காயம் - 2. எலுமிச்சம்பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. தாளிக்க: பட்டை - 1. லவங்கம் -2, ஏலக்காய் -2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.அரைக்க : பச்சை மிளகாய் - 4. புதினா - ஒரு கட்டு, மல்லி - அரை கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 5 பல்.செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து வதக்கி அரைத்தெடுங்கள். பாசுமதி அரிசியை ஊறவைத்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயம் சேர்த்துக் கிளறுங்கள். சிறிது உப்பையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு, பட்டாணியையும் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறுங்கள். பச்சை வாசனை போக வதங்கியதும், உப்பு. எலுமிச்சம்பழச் சாறு, வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடி போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறுங்கள். பீஸ் புலாவ் தயார்.