தேசிய தடகளத்தில் 195 புள்ளிகளுடன்தமிழக அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன் ஷிப் சென்னையில், ஈட்டிஎறிதலில் உ.பி.,யின் ரோகித் யாதவ் 83.65 மீ.,எறிந்து தங்கம் வென்றார்.
தமிழகத்தின் கோபிகா (1.80 மீ.,) உயரம் தாண்டுதலில்தங்கத்தை தட்டிச் சென்றார். 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் தமிழகத்தின் அனுபிரியா (10 நிமிடம், 36.81 வினாடி) வெண்கலம் வென்றார். 10,000மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் லதா (36 நிமிடம், 19.07 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.
யோகேஷ், சந்தோஷ், ராஜேஷ், ரமேஷ், விஷால் அடங்கிய தமிழக அணி, 4x400, மீ தொடர் ஓட்டத்தில்பந்தய துாரத்தை 3 நிமிடம், 07.53 வினாடியில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றது.
ஒலிம்பாஸ்டெபி, தேசிகா, மரியா, வித்யா ராம்ராஜ் அடங்கிய தமிழக அணி 4×400 மீ., தொடர் ஓட்டத்தில் (3 நிமிடம், 38.54 வினாடி) வெண்கலம் வென்றது.195 புள்ளிகளுடன் தமிழக அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
0
Leave a Reply