25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


சமையல்

Mar 14, 2025

முட்டை குருமா

தேவையான பொருட்கள் : 2 பெரிய வெங்காயம்,1 தக்காளி, 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 முட்டை,1 துண்டு பட்டை,3 ஏலக்காய், 2 கிராம்பு,1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1 டீஸ்பூன்மிளகாய்த்தூள்,1 டீஸ்பூன் மல்லித்தூள்,1/4 டீஸ்பூன், கரம் மசாலா,தேவையான அளவுஉப்பு,1/4 மூடி தேங்காய்செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் ,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும் .இஞ்சி பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.தக்காளி நன்கு வதங்கியதும் ,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி தேங்காயை நைசாக அரைத்து சேர்த்து ,தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.குருமா நன்கு கொதித்ததும் ,இரண்டு முட்டையை அதில் உடைத்து ஊற்றி சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும்.10 நிமிடம் கழித்து முட்டையை திருப்பிப் போட்டு அடுப்பை அணைத்து விடவும். இப்போது முட்டை குருமா பரிமாற தயார்

Mar 07, 2025

குடமிளகாய் பனீர் மசாலா

தேவையான பொருட்கள் :  குடமிளகாய் 2. பனீர் - 200 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி -2, சாட் மசாலா - 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.செய்முறை: குடமிளகாய், பனீர், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சதுர துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பனீர், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி சாட்மசாலா, எலுமிச்சம்பழச் சாறு சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.சாலட் வகைகள், புலாவ், சப்பாத்தி, புரோட்டாவுடன் சாப்பிட ஏற்ற மசாலா இது. 

Mar 07, 2025

பனீர் கோவா உருண்டை

தேவையான பொருட்கள் : பனீர் - 200 கிராம். பால்கோவா 100 கிராம். கால் கப். பொடித்த சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன் அல்லது வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்.செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அடித்துக்கொள்ளுங்கள். பனீரைத் துருவிக்கொள்ளுங்கள். தேங்காய். கோவா, பனீர், சர்க்கரை, எசன்ஸ் அல்லது ஏலக்காய்தூள் கலந்து, சிறுசிறு உருண்டைகளாக நன்கு அழுத்திப் பிடித்து வையுங்கள். விருந்துக்களுக்கு ஏற்ற வித்தியாசமான ஸ்வீட் உருண்டை.

Mar 07, 2025

பனீர் தயிர் டிலைட்

தேவையான பொருட்கள் :  பனீர் - 200 கிராம், மிளகாய்தூள் 2 டீஸ்பூன்,தனியாதூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. வினிகர் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை:பனீரைவிரல்நீளத்துண்டுகளாகசற்றுஅகலமாகநறுக்குங்கள்.அத்துடன்மிளகாய்தூளில்பாதி, தனியாதூள், சீரகத்தூள், வினிகர், உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற வையுங்கள். தயிரை ஒரு துணியில் வடிகட்டுங்கள். பின்னர். அதில் மீதமுள்ள மிளகாய்தூளை சேர்த்து நன்கு கலக்குங்கள். அத்துடன் பனீர் துண்டுகளை சேர்த்து பிசறி கலந்து பறிமாறுங்கள்.

Mar 07, 2025

பனீர் பஜ்ஜி

தேவையான பொருட்கள் : பனீர் 200 கிராம், கடலைமாவு ஒரு கப்  மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, எண்ணெய் தேவையான அளவு.பொடிக்க : சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்.செய்முறை: பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன்எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்.

Mar 07, 2025

பன்னீர் மசாலா கிரேவி

தேவையான பொருட்கள்:பன்னீர் 200 கிராம்,நறுக்கிய வெங்காயம் 2,நறுக்கிய தக்காளி 2, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,தனியா  தூள் : 2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,கரமசாலா தூள் 1 தேக்கரண்டி,இஞ்சி பூண்டு பேஸ்ட்2தேக்கரண்டி,எண்ணெய் தேவையான அளவு,உப்பு தேவையான அளவுபால் ஆடை 1 தேக்கரண்டி,ஏலக்காய்-2,பட்டை-சிறிதளவு,கிராம்பு – சிறிதளவு,கருவேப்பிலை- சிறிதளவுபன்னீர் மசாலா கிரேவி செய்முறை-எடுத்து வைத்துள்ள பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள மசாலா பொடி, மற்றும் சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் பன்னீருடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் கலந்து வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைய்யுங்கள். அந்த பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள பன்னீர் மசாலா பொருட்களை அதில் போட்டு ,வதக்கி தனியாக வைத்து கொள்ளுங்கள்.அடுத்ததாக அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அந்த பாத்திரம் காய்ந்த உடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி சிறிது நேரம் அதை ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு வதக்கி வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து விடுங்கள்.கடைசியாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி எடுத்து வைத்துள்ள கிராம்பு, பட்டை, ஏலக்காய், பால் ஆடை, சிறிதளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.5 நிமிடம் கழித்த பிறகு வதக்கி வைத்துள்ள பன்னீர் மசாலா பொருள், மிக்சி ஜாரில் அரைத்த பேஸ்ட் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் அடுப்பில் கொதிக்க விடுங்கள். மசாலா பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி விட்டு கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான பன்னீர் மசாலா கிரேவி தயார். இந்த கிரேவியை சப்பாத்தி இட்லி, தோசை, பரோட்டா அனைத்திற்கும் சைடிஷாக சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

Mar 07, 2025

.சுவையான பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள்: பன்னீர்-200 கிராம்.பாஸ்மதி அரிசி - 1 கப்,வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) – 2,சீரகம் -1/2 தேக்கரண்டி,கேரட் 1 கப்,பீன்ஸ் - 1 கப், பச்சை மிளகாய் – 2,கரம் மசாலா - 1 தேக்கரண்டி,எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,.நெய் - 2 தேக்கரண்டி,புதினா-தேவையான அளவு,கொத்தமல்லி - தேவையான அளவு,பிரியாணி இலை 1,ஏலக்காய் 2,கிராம்பு-3,மிளகு-தேவையான அளவு,இலவங்கப்பட்டை – 2,தண்ணீர் - தேவையான அளவு,உப்பு -தேவையான அளவுசெய்முறை பன்னீர் புலாவ் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய200 கிராம் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.பன்னீர் புலாவ் செய்ய அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு பட்டை, 3 ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, சிறிதளவு மிளகு, பொடிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் 4 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் அவற்றில்1/2 கப் நறுக்கிய கேரட்,1/2 கப் நறுக்கிய பீன்ஸ்,1/2 கப் பச்சை பட்டாணி,ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும்.காய்கறிகள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு கையளவு புதினா ஒரு கையளவு கொத்தமல்லி மற்றும் வறுத்து வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.பின்பு சுத்தமாக கழுவி30 நிமிடங்கள் ஊறவைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசியை இவற்றில் சேர்த்து சில நிமிடங்கள் மெதுவாக வதக்கிவிடவும். பின்பு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிட்டு பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.இப்பொழுது சுவையான பன்னீர் புலாவ் தயார். சமையல் குறிப்பு: பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும்.பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும்.

Feb 28, 2025

பாசிப்பருப்பு இனிப்பு இட்லி

தேவையான பொருட்கள் - பாசிப்பருப்பு ஒரு கப். பச்சரிசி கால் கப். சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன். ஆப்ப சோடா சிட்டிகை. நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை: பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒருமணிநேரம் ஊற வையுங்கள். பிறகு சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், சர்க்கரை. ஏலக்காய் ஆப்ப சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி நன்கு வேகவைத்தெடுங்கள் (நன்கு வெந்த அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்). துண்டுகள் போட்டு, சூடாக சாப்பிட்டால். சுவையாக இருக்கும். 

Feb 28, 2025

கோதுமை ரவை இட்லி

தேவையான பொருட்கள் - கோதுமை ரவை ஒரு கப், உளுத்தம்பருப்பு கால் கப், உப்பு தேவையான அளவு.செய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.

Feb 28, 2025

அரிசி ரவை இட்லி

தேவையான பொருட்கள் - புழுங்கலரிசி ரவை 2 கப். உளுத்தம்பருப்பு அரை கப், உப்பு -தேவையான அளவு.செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.பிறகு, கிரைண்டரில் போட்டு, தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள். அரிசி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன், உப்பும் சேர்த்துக் கலந்து, நன்கு கரைத்து வையுங்கள். மாவு நன்கு புளித்தவுடன் (8 மணி நேரம் புளிக்கவேண்டும்) இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள். ஹோட்டல் இட்லி தயாரிக்கப்படும் விதம் இதுதான்.

1 2 ... 25 26 27 28 29 30 31 ... 52 53

AD's



More News