25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திருவில்லிபுத்தூர்  மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (28.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் மகளிர்களுக்காக  செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சியில்,  மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு சுய உதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினார்.பின்னர், பிள்ளையார் குளம் ஊராட்சியில், சமூக முதலீட்டு நிதியிலிருந்து ரூ.50,000/- கடனுதவி பெற்று தேநீர் கடை நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடினார் .பின்னர், இராமச்சந்திராபுரம் ஊராட்சியில், பழைய செங்குளம் கிராமத்தில் சுமார் 25 மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து, இராமச்சந்திராபுரம் ஊராட்சியில், சமுதாய திறன் பள்ளியில் பயிற்சி பெற்று, வட்டார வணிக நலன் நிறுவனத்திடம் இருந்து ரூ.50,000/- கடனுதவி பெற்று போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரை நேரில் சென்று பார்வையிட்டு, கலந்துரையாடினார்.பின்னர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், கரிசல்காடு விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராஜபாளையம் நகராட்சியில், நாய் அறுவை சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை  தொடர்ந்து, இராஜபாளையம்  பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News