25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையல்

Aug 16, 2025

தேன்குழல் முறுக்கு

தேவையான பொருட்கள் -2,1/2 கப் பதப்படுத்தின பச்சரிசி மாவு, 1/2 கப் வறுத்தரைத்த உளுத்தம் மாவு,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்எள்ளு,பெருங்காயம், உப்பு,பொரிப்பதற்கு எண்ணெய்,1டேபிள்ஸ்பூன் வெண்ணைசெய்முறை - பச்சரிசியை ஊறவைத்து திரித்து வாணலியில் வறுத்துவைக்கவும். (கோலம் போட்டால் இழை வருவது மாதிரி)உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும் . ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு சேர்த்து கலந்து, எள்ளு, சீரகம், தேவையான உப்பு நன்கு கலந்துகொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சூடு பண்ணி,கலந்து வைத்திருக்கும் மாவில் வெண்ணை, மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு, கிளறி தேவையான தண்ணி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். (சப்பாத்தி மாவு பதம்)முறுக்கு ஒழக்கில் எண்ணெய் தடவி, தேன்குழல் அச்சு போட்டு எண்ணெயில் முறுக்கு பிழிந்து விட்டு, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு ஓசை அடங்கியதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.வாயில் போட்டதும் கரை ந்து போகும் அளவுக்கு மொறு மொறு முறுக்கு சுவைக்க தயார் .குழைந்தைகளுக்கு பிடித்தமானது செய்து குடுத்து மகிழவும்..

Aug 16, 2025

.தட்டை

தேவையான பொருட்கள் - 2 டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1டேபிள்ஸ்பூன் உடைத்த கடலை, தேவையானஅளவு பெருங்காயம்,1 கப்அரிசிமாவு,1டேபிள்ஸ்பூன்சீரகம்1டேபிள்ஸ்பூன் எள்ளு,தேவையானஅளவு கருவேப்பிலை,தேவையான அளவு உப்பு,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,2டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,தேவையான அளவு தண்ணீர்,பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்செய்முறை- ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு சேர்த்து ,நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் வறுத்த உளுந்தம் பருப்பு, உடைத்த கடலை, பெருங்காயம் சேர்த்து நன்கு அறைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த பொடி, உப்பு, மிளகாய் தூள்,கருவேப்பிலை, எள்ளு, ஊறவைத்துள்ள கடலை பருப்பு ,சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து பிசையவும்.சிறிய உருண்டைகளாக உருட்டி ,வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான தட்டை தயார்.

Aug 09, 2025

முட்டை சுக்கா

தேவையான பொருட்கள். 6 முட்டை 1 டீஸ்பூன் மிளகாய் தூள்1டீஸ்பூன் தனியா தூள்1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்விழுது அரைக்க:1டீஸ்பூன் சோம்பு,பட்டை2 கிராம்பு,2 பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,தேவையான அளவு உப்பு,3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,கறிவேப்பிலைசெய்முறை :முட்டையை வேக வைத்து,மேல் உள்ள ஓட்டை எடுத்து விட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.மேலே கொடுத்துள்ள மசாலாவை அரைத்து, உப்பு, எண்ணெய், மசாலா பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.பின்னர் ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.அதன்பின் முட்டையை இரண்டாக நறுக்கி,கலந்து வைத்துள்ள மசாலா விழுதை தேய்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாராக உள்ள மசாலா தடவிய முட்டைகளை அடுக்கவும்.ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து,பின்னர் திருப்பி போட்டு, கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.மேலும் ஐந்து நிமிடங்கள் கலந்து, நன்கு முட்டை மசாலா வற்றி வந்ததும் இறக்கினால் முட்டை சுக்கா தயார். தயாரான சுக்காவை எடுத்து ஒருதட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான முட்டை சுக்கா தயார். இந்த முட்டை சுக்கா சாதம், சப்பாத் தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Aug 09, 2025

எக் ஸ்பைசி புர்ஜி

தேவையான பொருட்கள்-முட்டை-4மஞ்சள்பொடி -கால்ஸ்பூன்மிளகாய்தூள்- 1 ஸ்பூன்மல்லித்தூள் -அரைஸ்பூன் கரம்மசாலா- அரைஸ்பூன்உப்பு - தேவைக்குசமையல்எண்ணெய்- தேவைக்குசெய்முறை  -முதலில் தேவையானதை கட்பண்ணிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டுவிழுதுரெடி பண்ணிக் கொள்ளவும்.வேறுவாணலியில் எண்ணெய்விட்டு 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். நன்கு கலந்து விடவும். சிறிதளவுஉப்பு சேர்க்கலாம்.நன்கு உதிர்த்துவிடவும்,வேறு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய் விட்டு கட் பண்ணிய வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும். , இஞ்சி,பூண்டுபேஸ்ட் சேர்க்கவும். வத்தல் பொடி ,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து விட்டு,அரை கப் தண்ணீர் விட்டு உப்புச் சேர்க்கவும்.பின் உதிர்த்த முட்டையைச் சேர்க்கவும்.நன்கு கலந்துவிட்டு மல்லித்தழை சேர்த்து, .லேசாக கலந்து விடவும். Spicy egg பூர்ஜி ரெடி. கிரேவி பதத்தில் இருப்பதால்சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

Aug 09, 2025

சப்பாத்தி  ஆம்லெட்

தேவையான பொருட்கள்கோதுமை மாவு 2 கப் , ,முட்டை 4, பெரிய வெங்காயம்3,தக்காளி 2 .,பட்டாணி 1 கப்,  கேரட் 2,பச்சை மிளகாய் 2,உருளைக்கிழங்கு.2,சிறிய மில்மேக்கர் 1 கப்,மிளகாய் தூள் தேவையான அளவு,மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் ,உப்பு தேவையான அளவு,கறிமசாலா தூள்2 டீஸ்பூன் ,டோமேட்டோ சாஸ்,மைனஸ்,இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்.செய்முறை :சப்பாத்தி மாவு பிசைந்து அதை வட்டமாக திரட்டி கொள்ளவும்.ஒருபுறம் கல்லில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு பட்டாணி ,கேரட் ,உருளைக்கிழங்கு மில்மேக்கர் ,ஆகியவற்றை சேர்த்து, வதக்கி மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கறிமசாலா தூள், சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து வேக வைக்கவும்.முட்டையை உடைத்து கலக்கி அதில் வேக வைத்த கலவையை ஊற்றி கலந்துசப்பாத்தியில் வேக வைத்த பக்கம் தடவி சிறிதாக  எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான சப்பாத்தி  ஆம்லெட் ரெடி.

Aug 09, 2025

முட்டை பணியாரம்

தேவையான பொருட்கள்1. 4 முட்டை2. இரண்டுபல்லாரி வெங்காயம்3. ஒன்று பச்சை மிளகாய்.4. அரைடீஸ்பூன்மிளகுத்தூள்5. ருசி கேற்ப உப்பு6. ஐந்து மேஜை கரண்டி ஆயில்செய்முறை முதலில் ஒரு வாணலியில்,இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம், பச்சை மிளகாய் ,சேர்த்து பாதி அளவு வேக விட்டு வதக்கிஎடுத்துக் கொள்ளவும்.வதக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,உடன் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.பணியார கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் சூடானதும்,எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழிகளிலும் இந்த கலவையை ஊற்றவும். ஒருபுறம் வேகவும் திருப்பி விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து விடலாம். இப்பொழுது மிக மிக ருசியான சத்துக்கள் நிறைந்த முட்டை பணியாரம் தயார். சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி. முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும்

Aug 09, 2025

எக் சாண்ட்விச்

.தேவையான பொருட்கள் 1. 2 துண்டு பிரட் ஸ்லைஸ்2.1 மீடியம் சைஸ் வெங்காயம்3. 1/ 4 குடைமிளகாய்4. 1/ 4 தக்காளி5.  2 டீஸ்பூன் மயோனிஸ்6. 1டீஸ்பூன் டொமட்டோ சாஸ்7. 1/2 டீஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்8. 1/2 டீஸ்பூன் பெரி பெரி மசாலா9. 1/2 டீஸ்பூன் வெண்ணெய்10. 1 முட்டை 11. 1 சீஸ் ஸ்லைஸ்செய்முறை ஒரு பாத்திரத்தில் மயோனிஸ் டொமேட்டோ சாஸ் பெரி பெரி மசாலா மிக்ஸட் ஹெர்ப்ஸ் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.முட்டை, உப்பு,பெரி பெரி மசாலா, இவையானத்தையும் கலந்து முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.பிரட்இல் கலந்து வைத்துள்ள இந்த மயோனிஸ் கலவையை தடவும். வெங்காயம் குடைமிளகாய் தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.மயோனிஸ் கலவை தடவி வைத்துள்ள பிரட்டின் மேல்,வெங்காயம், குடைமிளகாய்,தக்காளி இவை அனைத்தையும் வைத்து, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், மேலே தூவி பொறித்து வைத்துள்ள முட்டையை வைத்து, அதன் மேல் மீதம் உள்ள மயோனைஸ் கலவை மற்றும் சீஸ் மற்றொரு பிரட்டை வைத்து முடி சாண்ட்விச் கிரில் பேனில் வைத்து மேலே வெண்ணெய் தடவி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். எக் சாண்ட்விச் தயார்.

Aug 09, 2025

சீஸி ரொட்டி ஆம்லெட்

தேவையான பொருட்கள்1. 2 முட்டை2. 2பிரட் துண்டுகள்3. சீஸ் துண்டு4.வெங்காயம்5. 1/2 குடமிளகாய்6.1 ஸ்பூன் மிளகு தூள்7. தேவையான அளவு உப்பு8. வெண்ணை செய்முறை முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு தவாவில் வெண்ணை தடவி உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.பிறகு அதின்மேல் சீஸ் துண்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும். சீஸி ரொட்டி ஆம்லெட் தயார்.

Aug 02, 2025

கேழ்வரகு( ராகி )  இட்லி

தேவையானவை :கேழ்வரகு - 1 கப்பச்சரிசி -11/4 கப்புழுங்கல் அரிசி -11/4 கப்உளுந்தம்பருப்பு - 3/4 கப்வெந்தயம் - 1 ஸ்பூன்ஆகியவற்றைநன்றாக கழுவி, வழக்கமாக இட்லிக்கு ஊறவைப்பது போல் ஊறவைத்து, அரைத்து புளிக்கவைத்து,இட்லி செய்தால்,சுவையாகவும், சத்தாகவும் இருக்கும் ராகி இட்லி.

Aug 02, 2025

கோதுமை ரவை இட்லி!

தேவையானவை :கோதுமைரவை - 1 கப், கெட்டித் தயிர் - 1 கப்,வெள்ளை உளுந்து - 1/4 கப், கடுகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.செய்முறை:வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் கோதுமை ரவையைப் போட்டு வறுக்கவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அத்துடன், அரைத்த உளுந்தைச் சேர்த்து இட்லி மாவுக்குக் கரைப்பதுபோல் கரைத்து வைக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு,நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்து மாவில் கொட்டிக் கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லிகளாக ஊற்றி வேகவைக்கவும்.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 68 69

AD's



More News