25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959-ன்படி சாதாரண கற்கள், மண், கிராவல், கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற பெரு கனிம குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24.02.2024 தேதி முதல் மின்னணு முறையில் இணையதள வாயிலாக மட்டுமே பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோர விண்ணப்பிக்கும் நபர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News