தேவையான பொருட்கள் -1 கப் பாசுமதி அரிசி,1/4 கிலோ முட்டைக்கோஸ்,பாதி கேப்ஸிகம்,1 பெரிய வெங்காயம்,1 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,5 பல் பூண்டு,2 1/2டேபிள் ஸ்பூன் எண்ணெய்,தேவைக்கு உப்பு,1 டீஸ்பூன் சோயா சாஸ்,2 டீஸ்பூன் நல்ல மிளகு தூள்.செய்முறை - முட்டைக்கோஸை நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.கேப்ஸிகத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் தேவைக்கு உப்பும் சேர்த்து கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்அரிசி முக்கால் பாகம் வெந்ததும், ரைஸை ஒரு வடிகட்டியில் வடித்து எடுக்கவும்.வடித்த ரைஸை நன்றாக ஆற விடவும்.ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு பச்சைமிளகாய், கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் இதில் முட்டைக்கோஸை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின்னர் இதில் ரைஸ் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸ், நல்ல மிளகு தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :- தக்காளி 3, வத்தல், 6, சின்ன வெங்காயம் 3,பூண்டு 5 பல், இஞ்சி 1 துண்டு, மிக்ஸியில் நைசாக, ரவை 1 கப், சோதுமை மாவு அரைகப், தேங்காய் துருவல் அரை கப், உப்பு தேவையான அளவு.செய்முறை - இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.பின் இவை இரண்டையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். ரொம்பவும் தண்ணீராக இரைக்காமல் கொஞ்சம், கெட்டியாகவே கரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து மல்லி இலை பொடியாக வெட்டியதைச் சேர்க்கவும். பின் 10 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். பின் தோசைக் கல்லை சூடாக்கி மாவைக் கலந்து விட்டு நைஸாக ஊற்றாமல் கொஞ்சம் தடிமனாக ஊத்தப்பம் மாதிரி ஊற்றி, மூடி வைத்து 3 செகன்ட்ஸ் மிதமான சூட்டில் வேகவைத்து திருப்பி போடாமல் சிறிதளவு நெய்விட்டு பிரட்டிப் போடாமல் அப்படியே எடுத்து விடவும். தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கம், இது காலை டிபன், இரவு டின்னருக்கு சுவையான ஊத்தப்பம் ரெடி.
தேவையான பொருட்கள் :- உள்தொக்கிற்கு தேவையான பொருட்கள் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு சிறிதளவு, வெங்காயம் 1 பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு அரை டீஸ்பூன், கருவேப்பிலை பொடியாக வெட்டியது. தக்காளி 1 பெரியது. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், வத்தல்பொடி முக்கால் டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், கோதுமை மாவு 1 கப், எண்ணெய் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,செய்முறை - எண்ணெய் விட்டு, கடுகு வெடித்தவுடன் வெங்காயம் இஞ்சி, பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி விடவும். நன்றாக வதங்கியதும், மஞ்சள், வத்தல் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி விடவும், பின் தேங்காய்த்துருவலை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, பொடியாக வெட்டிய மல்லித்தழை அல்லது கஸ்தூரி மேத்தி பவுடர் சேர்த்து இறக்கி விடவும். நன்றாக ஆற விடவும்.சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக சாப்ட்டாக பிசைந்து எடுத்துக் கொண்டு 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பின் மாவை எடுத்து சின்ன உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக மெல்லிசாக தேய்த்து எடுக்கவும், திரட்டிய சப்பாத்திக்குள் வதக்கிய தொக்கை நடுவில் வைத்து, பின் ஓரங்களை ஒன்ற சேர்த்து மூடி லேசாக தட்டி விடவும். கையில் எண்ணெய் தடவி மசாலா வெளிவராமல், சின்ன ரவுண்டாகத் தேய்த்து, தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சப்பாத்திகளை போட்டு பிரவுன் கலராக வரும் வரையில் சுட்டு எடுக்கவும் இதற்கு சைட்டிஷ் தேவையில்லை. வேண்டுமென்றால் Tomoto ketchep, Mayonize. தயிர் தொட்டு சாப்பிட, சுவையான டிபன் ரெடி.
தேவையான பொருட்கள் :- ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், சேர்த்து பொரிந்தவுடன் 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கி சோத்து நன்றாக வதக்கவும், 2 பச்சமிளகாய் பொடியாக வெட்டி சேர்க்கவும். பின் சிறிதளவு இஞ்சி துருவி சேர்த்து, பொடியாக வெட்டிய கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிடவும், 1 சிறிய கேரட் துருவி சேர்த்து விட்டு வதக்கி மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்த்து விட்டு இறக்கி ஆற வைக்கவும்.செய்முறை - கோதுமை மாவு ஒன்றரை கப், அல்லது கேப்பை மாவு, அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன், பின் இத்துடன் வதக்கியவற்றை சேர்த்து அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு, உப்பு சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பொடியாக உடைத்த நிலக்கடலை சேர்த்து மல்லி இலை சேர்த்து தண்ணீர் விடாமல் கலந்து விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு மாதிரி இல்லாமல் கொஞ்சம் லூசாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி ,உருண்டைகளை வைத்து நைஸாகத் தட்டி விட்டு (ரவுண்டாக) காய்ந்த தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் விட்டு, வாழை இலையில் அப்படியே பேனில் தட்டி விட்டு மெதுவாக வாழை இலையை எடுத்து விட்டு, இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு, எடுத்து வைக்கவும். இந்த அடைக்கு சைட்டிஷ் தேவையில்லை. தேவையானால் தேங்காய் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையான சத்தான தோசை அடை ரெடி.
செய்முறை :- பூசணிக்காய் கால் கிலோ, தோல் சீவிய விட்டு துண்டுகளாக வெட்டி ஆவியில் வேக வைக்கவும். பின் அதை நன்றாக மசித்து விட்டு 1 டீஸ்பூன் வத்தல் பொடி, அரை டீஸ்பூன் சீரகப் பொடி, கரம் மசாலா அரை டீஸ்பூன், கஸ்தூரி மேதி அல்லது மல்லி இலை பொடியாக வெட்டியது. சுவைக்கு ஏற்ப உப்பு, பெருங்காயத்தூள் வெள்ளை எள் 3 டீஸ்பூன் சேர்த்து, 2 கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, எண்ணெ தடவி 10 நிமிடம் மூடிவைத்து பின் உருண்டையாக சப்பாத்தி மாதிரி திரட்டி ஒரங்களை சதுரமாக மடித்து, மறுபடியும் சதுர சப்பாத்திகளாக திரட்டி, டவாவில் லேசாக எண்ணெய் தடவி ,சப்பாத்திகளை போட்டு நெய் விட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் வேக வைக்கவும். நெய் இல்லாவிட்டால் எண்ணெய் விட்டும் வேக வைக்கலாம். சூடான சப்பாத்திகளில் சிறிதளவு வெண்ணெய் வைத்து உருகியவுடன் சாப்பிட்டால் சாப்டான சுவையான பூசணி சப்பாத்தி ரெடி.
செய்முறை :- ஒட்ஸ் 1 கப், பால் 1 கப், சோத்து நன்றாகக் கலந்து விடவும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தூள், அல்லது மல்லி இலை, 1 காரட் (மீடியம் சைஸ்) பொடியாக துருவியது. முட்டை 1, உப்பு சேர்த்து மிளகு பொடி காரத்திற்கு ஏற்ப சேர்த்து கலந்து விடவும் கொஞ்சம் துருவிய சீஸ் சேர்த்து ஊற வைத்த ஓட்ஸையும் சேர்த்து கலந்து விடவும் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து இந்தக் கலவையை ரவுண்டாகத் தட்டி 180 டிகிரி, 20 minites அவனில் பேக் செய்து மொறு, மொறு ஒட்ஸ் தோசை ரெடி.உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஓட்ஸ் கலவையுடன் 1 முட்டை, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் நன்றாக மசித்தது, சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். பின் ஒரு கேக் மோல்டில் வெண்ணெய் தடவி அதில் இந்தக் கலவையை ஊற்றி,, பின் பொடித்த வால் நட்டை (20 gm) மேலே தூவி 180 டிகிரியில் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து வைக்கவும். சுவையான சத்தான ஒட்ஸ் மீல் கேக் ரெடி
ஆரோக்கியமான உணவென்றால் சுவையாக இருக்காது என்ற ஒரு கருத்து உண்டு, தானியங்கள் என்றாலே ராகி, கேழ்வரகு போன்றவைதான் நினைவிற்கு வரும். ஆனால் இவையனைத்தையும் விட ஆரோக்கியமானது தினை அரிசி.தானியங்கள் என்றால் அதில் தோசை அல்லது கஞ்சி போன்றவைதான் செய்வார்கள், ஆனால் தினை அரிசியில் பிரியாணியே செய்யலாம். தினை அரிசியில் செய்யும் வெஜிடபிள் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்வது போன்ற சுவையில் இருக்கும். தேவையான பொருட்கள்: - தினை அரிசி - 1 கப் - தண்ணீர் - 3 கப் - நெய் - 2 ஸ்பூன் - உப்பு - தேவைக்கு ஏற்ப - நறுக்கிய காய்கறிகள் - அரை கப்(கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் ,புதினா – சிறிதளவு, பிரியாணி இலை - 1 , ஏலக்காய் - 2 , கிராம்பு - 4 , இலவங்கப்பட்டை - 1 , அன்னாசி பூ - 1 , சீரகம் - கால் ஸ்பூன். செய்முறை:- தினை அரிசியை நன்றாக கழுவி, வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். - ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் உட்பட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து அவை வெடிக்கும் வரை வதக்கவும்.- அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - அதன்பின் காய்கறிகள் மற்றும் புதினாவைச் சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - அதன்பின் தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும். தினை அரிசியை வடிகட்டி அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். அரிசி முழுமையாக வேகும் வரை நடுத்தர முதல் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் நன்கு வற்றும் வரை கலவையை நன்கு கிளறி விடவும். தினை அரிசி நன்கு வெந்ததும் உப்பு பார்த்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்தவுடன் இறுக்கமான மூடி போட்டு7 நிமிடம் மூடி வைக்கவும்.சூடான தினை அரிசி வெஜிடபிள் பிரியாணி ரெடி. தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிடவும்.
காலை உணவாக வரகரிசி மற்றும் சாமை அரிசியைக் கொண்டு, அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து கஞ்சி செய்யுங்கள். இந்த கஞ்சி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. வேகமாக உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க உதவி புரியும்.உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும்.தேவையான பொருட்கள்: வரகரிசி - 100 கிராம் , சாமை அரிசி - 100 கிராம் , பாசிப்பருப்பு - 100 கிராம் , தண்ணீர் - 8 கப் , சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) , பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது) ,பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் , சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் , உப்பு – சுவைக்கேற்ப, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 1 கைப்பிடி , எலுமிச்சை – பாதி செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் சாமை அரிசியை எடுத்து, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து நீர் ஊற்றி 2 முறை கழுவிவிட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.1/2 மணிநேரம் கழித்து, அரிசி மற்றும் பருப்பை கழுவிவிட்டு, பின் அதை குக்கரில் போட வேண்டும். பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில்8 கப் நீரை ஊற்ற வேண்டும். அதன் பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்பிறகு அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின்னர் குக்கரை மூடி உயர் தீயில்1 விசில் விட்டு, பின் குறைவான தீயில்2 விசில் விட்டு இறக்க வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட வேண்டும்.கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை தேவையான அளவு ஊற்றி கிளறி விட வேண்டும். அதில் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி தயார்.
தேவையான பொருட்கள் தினை - 1/2 கப்வெல்லம் - 3/4 கப்நெய் - 1 1/2 டீஸ்பூன்முந்திரி பருப்பு - 5-6திராட்சை - 6-7ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி,சுக்கு தூள், பச்சை கற்பூரம்- செய்முறைதிணையைக் கழுவி15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு கடாயை சூடாக்கி, அதன் நிறம் மாறாமல் மணம் வரும் வரை வறுக்கவும்.பிரஷர் குக்கரில் திணை, மூங்கால், பால், தண்ணீர் இரண்டையும் பிரஷர் குக்கரில்4 விசில் விடவும். வெல்லத்தை தட்டி அளந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து,2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதுமாக உருகும் வரை சூடாக்கி, சிரப்பை ஒரு வடிகட்டி வழியாக அசுத்தங்களை வடிகட்டவும்.பிரஷர் வெளியானதும் பிரஷர் குக்கரைத் திறந்து, சமைத்த தினை மற்றும் வெல்லம் பாகு சேர்க்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, பொங்கலை குறைந்த தீயில்7,10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். நெய் விட்டு சூடாக்கி அதில் உடைத்த முந்திரியை, திராட்சை,சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை சமைக்கும் திணை சக்கரைப் பொங்கலுக்கு மாற்றவும். ஏலக்காய் தூள், சுக்கு தூள், பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்கவும். தீயை அணைத்து சூடாக பரிமாறவும்.
தேவையான பொருட்கள்-1கப் வரகு அரிசி,1கப் பாசிப்பருப்பு,2ஸ்பூன் பட்டர்,உப்பு சுவைக்கேற்ப ,2 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்மிளகு,2 கொத்து கருவேப்பிலை,நெய்,1டம்ளர் பால்.செய்முறை.வரகு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி1/2மணி நேரம் ஊற விடவும்.பின்னர் குக்கரில் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் சீரகம், பட்டர், இஞ்சி சேர்த்து அதனுடன்1பங்கு அரிசிக்கு3பங்கு தண்ணீர் சேர்த்து4விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.பின்னர் பால், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்(பால் சேர்ப்பதால் பொங்கல் ஆறிய உடனும் கெட்டி படாமல் இலகுவாக இருக்கும்).பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும். செம டேஸ்டி ஹெல்த்தி பொங்கல் தயார்.