25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


சமையல்

Dec 06, 2024

ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி

தேவையான பொருட்கள் : சாதம் - ஒரு கப், கேரட் - 1, பீன்ஸ் - 6, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு, மல்லித்தழை சிறிது, எண்ணெய் - தேவைக்கு.க்ரேவி: வெங்காயம் - 2, சோயா சாஸ் -2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு கலர் - சிறிது, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, மல்லித்தழை - தேவைக்கு. நசுக்க: இஞ்சி ஒரு துண்டு,பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் -6.செய்முறை: சாதத்தை நன்கு குழைவாக பிசைந்துகொள்ளுங்கள். காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். நசுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு நசுக்குங்கள். சாதத்துடன் காய்கறி, மல்லித்தழை, சோயாசாஸ், உப்பு, நசுக்கிய விழுதில் சிறிது, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். இக்கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து நசுக்கிய விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சோயாசாஸ், உப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரையும் ஆரஞ்சு கலரையும் கரைத்து வெங்காயக் கலவையில் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் போது உருண்டைகளை சேர்த்து பரிமாறுங்கள்.நூடுல்ஸுக்கும் ஃப்ரைட் ரைஸுக்கும் இந்த கிரேவி பிரமாதமான ஜோடி.

Dec 06, 2024

ஸ்டஃப்டு புடலை தால்

தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு - ஒரு கப், சற்று மெல்லிய, சிறிய புடலை -1, தேங்காய்பால் - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்), ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீன்ஸ் - 5, பச்சை மிளகாய் 2,இஞ்சி ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: பெரிய வெங்காயம் -1, காய்ந்த மிளகாய் -2, கறிவேப்பிலை -சிறிது,நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை.செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும்வரைவறுத்தெடுங்கள். பின்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை நன்கு அரைத்து அதில் சேருங்கள். அதோடு உப்பையும் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதித்தபின் இறக்கி, தேங்காய் பாலை ஊற்றுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை இரண்டாக கிள்ளுங்கள். நெய், எண்ணெயைக் காயவைத்து, மிளகாய் சேர்த்து வறுத்து. வெங்காயம். கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பருப்பில் சேருங்கள்.இதுதான் தால்.புடலையை 2 அங்குல நீளத்துக்கு முழுதாக வெட்டிக்கொள்ளுங்கள். அதனுள்ளிருக்கும் விதையை நீக்கிவிடுங்கள். உப்பு கலந்த நீரில் வேகவைத்து எடுங்கள். (உடையாதபடி கவனமாக கையாள வேண்டும்). உருளை, கேரட்டை, தோல் சீவி, பீன்ஸுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கையால் மசித்துவிடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை கரகரப்பாக அரைத்து எண்ணெயில் தாளித்து, காய்கறியில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு. உப்பு சேர்த்து பிசைந்து புடலையினுள் அடைத்துவிடுங்கள். பரிமாறும் பாத்திரத்தில் இதனை அடுக்கி அதன்மேல் தாலை ஊற்றி, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

Dec 06, 2024

உளுந்து தக்காளி மசாலா

தேவையான பொருட்கள் :  முழு உளுந்து - அரை கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், நெய் -அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: உளுந்தை மஞ்சள்தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவையுங்கள். குக்கர் என்றால் 2 விசில் போதும். குழைந்துவிடக்கூடாது. தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். நெய், எண்ணெயை ஒன்றாகக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, வெந்த உளுந்து, உப்பு, கறிவேப்பிலை. மல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேருங்கள். அசத்தலான சைட் டிஷ் இது. 

Dec 06, 2024

க்ரீன் கறி வெஜ் கோப்ஃதா

தேவையான பொருட்கள் :  (கோஃப்தாவுக்கு)உருளைக்கிழங்கு 2.கேரட் - 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, பீன்ஸ் 2 ,மைதா 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், கரம்மசாலா அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு ருசிக்கு. எண்ணெய் - தேவைக்கு. பிரெட் ஸ்லைஸ் - 2. அரைக்க: தேங்காய் ஒரு மூடி, முந்திரி 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்க வேண்டும்). புதினா அரை கட்டு, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, இஞ்சி -ஒரு துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 6 (இவை அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்). தாளிக்க: பட்டை ஒரு துண்டு, லவங்கம் -2, பெரிய வெங்காயம்- 2, எலுமிச்சம்பழச்சாறுஒருடேபிள்ஸ்பூன், எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.செய்முறை:கிழங்கைவேகவைத்துதோலுரித்துமசித்துக்கொள்ளுங்கள்.காய்கறிகளைபொடியாகநறுக்கிவேகவைத்து, தண்ணீரில்லாமல் வடித்து மசியுங்கள். அத்துடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்துப் பிசையுங்கள். சிறுசிறு உருண்டைகளாக உருட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் பொரித்தெடுங்கள். கோஃப்தா ரெடி.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் புதினா மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள். பின்னர் தேங்காய், முந்திரி, விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் பொழுது உருளைக்கிழங்கு கோஃப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு பரிமாறுங்கள்.விருந்துக்களுக்கு ஏற்ற வித்தியாசமான சைட் டிஷ்.

Nov 29, 2024

.சிறுகிழங்கு பொரியல்.

தேவையானவை: சிறு கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். மசாலாவிற்கு: வரமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்துருவல் - கால் மூடி, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, பூண்டு - 2 பல்,செய்முறை: சிறு கிழங்கை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிகீற்றாக அதாவது சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து வேக விடவும். காய் வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கித் தண்ணீரை வடித்து விடவும். வாணலியில்கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய காயை வதக்கவும். மசாலாவிற்கானபொருட்களை அரைக்கவும். காய் வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்துப் பிரட்டிக் கொஞ்ச நேரம்சிறு தீயில் வைத்திருந்து இறக்கவும். சிறு கிழங்கு பொரியல்

Nov 29, 2024

கோவைக்காய் பொரியல்.

தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, மிளகாய்தூள் - முக்கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், கடலைமாவு - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை,மல்லி இலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: கோவைக்காயைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். எண்ணெயைச் சூடு செய்துசீரகத்தைப் போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு, கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.அடுப்பை நிழலாக எரியவிட்டு, வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். காய் வெந்து பொன் நிறமாக வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கி இறக்கும்முன் கடலைமாவு தூவிக் கிளறி இறக்கி, மல்லி இலை தூவவும்.

Nov 29, 2024

.சேப்பங்கிழங்கு பொரியல்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு. மசாலாவிற்கு:வரமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - ஏழெட்டு, சீரகம் - அரை டீஸ்பூன், புளி - 1 சுளை.தாளிக்க: எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்.செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.தோல் உரிக்க வருகிற அளவு வெந்தால் போதும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை அரைத்துக்கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய கிழங்கை வதக்கவும். அரைத்த மசாலாசேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.எப்பொழுதுமே கிழங்கு வகைகளை தோல் உரிக்க வருகிற அளவிற்குத் தான் வேகவைக்கவேண்டும். நன்றாக வெந்தால் பொரியல் கொழகொழவென்று மசியல் போல் ஆகிவிடும்.

Nov 29, 2024

பச்சை பட்டாணி பொரியல்

தேவையானவை: உரித்த பச்சை பட்டாணி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வரமிளகாய் - 2,சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை,மல்லி இலை - தலா சிறிதளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பட்டாணியை வேக விட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும்.வரமிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும்இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணியையும், உப்பையும், அரைத்தமசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும். பட்டர்பீன்ஸிலும் இதே முறையில்பொரியல் செய்யலாம். நன்றாக இருக்கும்

Nov 29, 2024

பலாக்காய் பொரியல்!

தேவையான பொருட்கள்: பலாக்காய் – 1,பூண்டு பல் - 3 உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் துாள், சீரகம் - சிறிதளவு  தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு செய்முறை - பலாக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன், துருவிய தேங்காய், பூண்டு பல், சீரகத்தை அரைத்து கலக்கவும். தேங்காய் எண்ணெயில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அதில் கொட்டவும். சுவைமிக்க, 'பலாக்காய் பொரியல்!' தயார். சாதத்துடன் பக்க உணவாக பயன்படுத்தலாம்..

Nov 29, 2024

மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்.

தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பழுத்த தக்காளி - 2,பச்சைப் பட்டாணி - 50 கிராம், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன், கறிமசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லி இலை -சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும். வெங்காயத்தை நீளநீளமாகவும், ஒருதக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும். வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம்,தக்காளிப்பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும். உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும். பிறகு கரம்மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும். இதுவும் ஒரு ‘மல்ட்டி பர்பஸ்’ சைட்-டிஷ்தான். பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத் தூவலாம்.

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 52 53

AD's



More News