25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சமையல்

Aug 09, 2025

எக் சாண்ட்விச்

.தேவையான பொருட்கள் 1. 2 துண்டு பிரட் ஸ்லைஸ்2.1 மீடியம் சைஸ் வெங்காயம்3. 1/ 4 குடைமிளகாய்4. 1/ 4 தக்காளி5.  2 டீஸ்பூன் மயோனிஸ்6. 1டீஸ்பூன் டொமட்டோ சாஸ்7. 1/2 டீஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்8. 1/2 டீஸ்பூன் பெரி பெரி மசாலா9. 1/2 டீஸ்பூன் வெண்ணெய்10. 1 முட்டை 11. 1 சீஸ் ஸ்லைஸ்செய்முறை ஒரு பாத்திரத்தில் மயோனிஸ் டொமேட்டோ சாஸ் பெரி பெரி மசாலா மிக்ஸட் ஹெர்ப்ஸ் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.முட்டை, உப்பு,பெரி பெரி மசாலா, இவையானத்தையும் கலந்து முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.பிரட்இல் கலந்து வைத்துள்ள இந்த மயோனிஸ் கலவையை தடவும். வெங்காயம் குடைமிளகாய் தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.மயோனிஸ் கலவை தடவி வைத்துள்ள பிரட்டின் மேல்,வெங்காயம், குடைமிளகாய்,தக்காளி இவை அனைத்தையும் வைத்து, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், மேலே தூவி பொறித்து வைத்துள்ள முட்டையை வைத்து, அதன் மேல் மீதம் உள்ள மயோனைஸ் கலவை மற்றும் சீஸ் மற்றொரு பிரட்டை வைத்து முடி சாண்ட்விச் கிரில் பேனில் வைத்து மேலே வெண்ணெய் தடவி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். எக் சாண்ட்விச் தயார்.

Aug 09, 2025

சீஸி ரொட்டி ஆம்லெட்

தேவையான பொருட்கள்1. 2 முட்டை2. 2பிரட் துண்டுகள்3. சீஸ் துண்டு4.வெங்காயம்5. 1/2 குடமிளகாய்6.1 ஸ்பூன் மிளகு தூள்7. தேவையான அளவு உப்பு8. வெண்ணை செய்முறை முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு தவாவில் வெண்ணை தடவி உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.பிறகு அதின்மேல் சீஸ் துண்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும். சீஸி ரொட்டி ஆம்லெட் தயார்.

Aug 02, 2025

கேழ்வரகு( ராகி )  இட்லி

தேவையானவை :கேழ்வரகு - 1 கப்பச்சரிசி -11/4 கப்புழுங்கல் அரிசி -11/4 கப்உளுந்தம்பருப்பு - 3/4 கப்வெந்தயம் - 1 ஸ்பூன்ஆகியவற்றைநன்றாக கழுவி, வழக்கமாக இட்லிக்கு ஊறவைப்பது போல் ஊறவைத்து, அரைத்து புளிக்கவைத்து,இட்லி செய்தால்,சுவையாகவும், சத்தாகவும் இருக்கும் ராகி இட்லி.

Aug 02, 2025

கோதுமை ரவை இட்லி!

தேவையானவை :கோதுமைரவை - 1 கப், கெட்டித் தயிர் - 1 கப்,வெள்ளை உளுந்து - 1/4 கப், கடுகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.செய்முறை:வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் கோதுமை ரவையைப் போட்டு வறுக்கவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அத்துடன், அரைத்த உளுந்தைச் சேர்த்து இட்லி மாவுக்குக் கரைப்பதுபோல் கரைத்து வைக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு,நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்து மாவில் கொட்டிக் கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லிகளாக ஊற்றி வேகவைக்கவும்.

Aug 02, 2025

தயிர் இட்லி

தேவையான பொருட்கள் - இட்லி மாவு-2 கப், புளிக்காத புது தயிர்-3 டீஸ்பூன், ஓமப்பொடி-3 டீஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மல்லித்தழை சிறிதளவு.அரைக்க: தேங்காய் துருவல் 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் 4. முந்திரிப்பருப்பு -6.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.செய்முறை:மாவைக் கொண்டு சிறுசிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு. பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும். 

Aug 02, 2025

சுவையான காஞ்சிபுரம் இட்லி.

தேவையான பொருட்கள் - புழுங்கலரிசி ஒரு கப், பச்சரிசி ஒரு கப். உளுத்தம் பருப்புஒரு கப், நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஆப்பசோடா ஒரு சிட்டிகை.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு -ஒரு டீஸ்பூன். கடலைப் பருப்பு -2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன். தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், இஞ்சி -ஒரு துண்டு.செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி. சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள். ஆப்பசோடா சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியையும் துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கிமாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள். 

Aug 02, 2025

.கம்பு இட்லி.

தேவையான பொருட்கள் - கம்பு (சுத்தம் செய்தது) - ஒரு கப் புழுங்கலரிசி -அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப். உப்பு - தேவையான அளவு.செய்முறை: கம்பையும் அரிசியையும் தனித்தனியே ஊறவையுங்கள்.உளுந்தையும் ஊறவையுங்கள். பிறகு. கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப்பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். 5 அல்லது 6 மணி நேரம் புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.குறிப்பு: கம்பை வறுத்தும் ஊறவைக்கலாம். விருப்பப்பட்டால். அரைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் 2 பச்சை மிளகாய்களையும் சேர்த்து அரைக்கலாம். பொதுவாக, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய இட்லிகள், அரிசி இட்லியைப் போல'மெத்தென்று இருக்காது. அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள். கம்பு இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்புமா போல தாளித்து. ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து சாப்பிடலாம். 

Aug 02, 2025

ரவை இட்லி .

தேவையான பொருட்கள் -  பாம்பே ரவை ஒரு கப். சற்று புளித்த தயிர்-ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு தேவையான அளவு. நெய் 2 டீஸ்பூன்,தாளிக்க: மிளகு, அரை டீஸ்பூன், சீரகம்கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 2. இஞ்சி ஒரு துண்டு. கறிவேப்பிலை சிறிது, முந்திரிப்பருப்பு 6. எண்ணெய் டீஸ்பூன். 2செய்முறை: ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து. தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். பின்பு மற்ற பொருட்களையும் அதனுடன் சேர்த்து (தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து) இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்து எடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.   

Jul 26, 2025

பீட்ரூட் கார பணியாரம்!

தேவையான பொருட்கள்:துருவிய பீட்ரூட்1 கப்,பெரிய வெங்காயம் 1,வேர்கடலை பருப்பு-25 கிராம்,இட்லி மாவு1 கப்,சீரகம், எண்ணெய், உப்பு தேவையான அளவு,கருவேப்பிலை,மல்லித்தழை, பச்சை மிளகாய்- சிறிதளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், சீரகம், துருவிய பீட்ரூட், நறுக்கிய மல்லி தழை, வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாய், வேர்க்கடலை பருப்பு, உப்பு போட்டு வதக்கவும். இவற்றை இட்லி மாவில் நன்றாக கலக்கவும். பணியார சட்டி சூடானதும், மாவு கலவையை ஊற்றி நன்கு வேக வைக்கவும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும்சத்து மிக்க'பீட்ரூட் பணியாரம்!' தயார்.  

Jul 26, 2025

பீட்ரூட் சட்னி!

தேவையான பொருட்கள்:பீட்ரூட் -2 ,பெரிய வெங்காயம் – 2,பூண்டு - 5 பல்,காய்ந்த மிளகாய்,இஞ்சி, எண்ணெய்- சிறிதளவு ,கடுகு, உப்பு.,தண்ணீர்,,உளுந்தம் பருப்பு.கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், காய்ந்த மிளகாய், துண்டாக்கிய வெங்காயம், நறுக்கிய பீட்ரூட், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை போட்டு வதக்கவும். ஆறிய பின், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து கலக்கவும். இட்லி, தோசைக்கு, பக்க உணவாக தொட்டுக் கொள்ள சுவை மிக்க, 'பீட்ரூட் சட்னி!' தயார். 

1 2 ... 36 37 38 39 40 41 42 ... 76 77

AD's



More News