தேவையானவை: கண்டந்திப்பிலி - 100 கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் மற்றும் கடுகு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-இரண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில்நெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு மற்றும் ஒடித்த கண்டந்திப்பிலியைச் சேர்த்து வறுக்கவும். பின், மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.குறிப்பு: காய்ச்சல், உடல் வலி இருக்கும் சமயங்களில் இந்த ரசம் வைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வறுத்த மணத்தக்காளி வற்றல் அல்லது பருப்புத் துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.
தேவையானவை: காய்கறி கலவை மற்றும்பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், பூண்டு பல்- இரண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்), வெண்ணெய், கார்ன் ப்ளார் மற்றும் எலுமிச்சை சாறு - தலா ஒரு தேக்கரண்டி, சர்க்கரை - கால் தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்து சேர்க்கவும். பின்னர், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அடுப்பை அணைத்து இறக்கவும். மேலாக மிளகுத்துகளைத் துாவி, பிரெட் ஸ்டிக்ஸுடன் பரிமாறவும்.
தேவையானவை: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு இரண்டு பல், எண்ணெய் மற்றும் கார்ன் ப்ளார் - தலா ஒரு தேக்கரண்டி, சில்லி சாஸ் அரை தேக்கரண்டி,சோயா சாஸ்- ஒரு தேக்கரண்டி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் - ஒரு கப், மிளகுத்தூள், நூடுல்ஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.வேகவைத்த நுாடுல்ஸுடன், சிறிதளவு கார்ன் ப்ளார் சேர்த்து புரட்டி, எண்ணெயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி,பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த காய்கறிக் கலவையை சேர்த்து நன்றாக கிளறி, காய்கறிகள் வேகவைத்த தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.அதன் பின், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டையும் ஊற்றி, கார்ன் ப்ளாரை சிறிதளவு நீரில் கரைத்துச் சேர்க்கவும். சூப் சேர்ந்து வரும்போது, அடுப்பை அணைத்து இறக்கவும். மிளகுத்தூளை தூவி, வறுத்த நுாடுல்ஸை சூப்பின் மீது போட்டு பரிமாறவும்.
தேவையான பொருட்கள் : 1 கப் - பாலக் கீரை ,1 - வெங்காயம் , 1/2 கப் - காரட் ( துருவியது), 1/2 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன் - சோயா சாஸ் , சிறிதளவு - மல்லி தழை- 2 டீஸ்பூன் - வெண்ணெய் தேவையான அளவ-மிளகுதூள்காய்கறி வேகவைத்த தண்ணீர், தேவையான அளவு - உப்பு செய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் துருவிய காரட் , இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய பாலக் சேர்த்து வேக வைக்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவையானபொருட்கள் :2 கப் - மாதுளை 1/2 கப் - ஸ்வீட் கார்ன்1/2 டீஸ்பூன் - மிளகுத்தூள் 1 டீஸ்பூன் - இஞ்சிச்சாறு தேவையான அளவு- வெண்ணெய்தேவையான அளவு - உப்பு1 டீஸ்பூன் - சோள மாவு சிறிதளவு மல்லி தழைசெய்முறை : ஸ்வீட் கார்னை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் , இஞ்சிச்சாறு, மாதுளைச் சாறு சேர்த்துக் 5 மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அதனுடன் ஸ்வீட்கார்ன் கரைசல் சேர்த்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி வெண்ணெய், மிளகு தூள் மல்லிதழை தூவி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:1 கப் - நறுக்கிய காய்கறிகள் (வேக வைத்தது)1/2 கப் - நூடுல்ஸ் ( வேக வைத்தது)4 கப் - காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1 - வெங்காயம் தேவையான அளவு-மிளகுத்தூள்சிறிதளவு - வெங்காயத்தாள் சிறிதளவு -மல்லி தழை 2 டீஸ்பூன் - வெண்ணெய்1 டேபிள்ஸ்பூன் - கார்ன் மாவுதேவையான அளவு - உப்புசெய்முறை: வாணலியில் வெண்ணெயை சேர்த்து உருகியதும் நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கி... காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். இதில் சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்க்கவும்.நன்கு கொதித்த பின்னர் இறக்கி, பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி,மல்லி தழை,வெங்காயத்தாள், மிளகு தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -காம்பு நீக்கிய முருங்கை இலை 3 கையளவு, உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலைபருப்பு 1 டேபிள் ஸ்பூன், வத்தல் 6, புளி சின்ன எலுமிச்சை அளவு, பெருங்காயப் பொடி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் 1 டீஸ்பூன். கடுகு கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் 1 கையளவுசெய்முறை எண்ணெய் விட்டு, கடுகு பொரிந்ததும், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பாக வறுக்கவும், வத்தல் பெருங்காயம், சேர்த்து வதங்கியதும், தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி முருங்கைக்கீரை சேர்க்கவும், 2 நிமிடம் வதக்கி, புளி, உப்பு சேர்க்கவும், நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும், தண்ணீர் தேவை என்றால் சிறிது தெளித்துக் கொள்ளவும், சூடான சாதத்திற்கு சுவையான முருங்கைக்கீரை துவையல்.
தேவையான பொருட்கள்.-4 கப் முடக்கத்தான் கீரை,1/4கப் நல்லெண்ணை,1தேக்கரண்டி கடுகு,1தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி|,1தேக்கரண்டி வெந்தயம்,1 மேஜைக்கரண்டி உளுந்து,1 மேஜைக்கரண்டி தனியா,½கப் கடலை பருப்பு,4பல் பூண்டு, 1/2 கப் புதினா இலைகள்,1 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை,4 காரமிளகாய்,சிட்டிகை பெருங்காயம்,2 அங்குலம் இஞ்சி தோலுரித்தது,2 மேஜைக்கரண்டி புளி பேஸ்ட், தேவையான உப்பு செய்முறை - மிதமான நெருப்பில் ஒரு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணையில் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளிக்க பருப்புகள், மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வறுக்க வாசனை வரும் வரை,2 நிமிடம் கீரை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க-5 நிமிடங்கள். மஞ்சள் பொடி சேர்க்க வதக்கலையும், புளியும் சேர்த்து பிளெண்டரில்1 கப் நீர் சேர்த்து அரைக்க. உப்பு சேர்த்து கலக்க. ருசியான முடக்கத்தான் கீரை துவையல் தயார். முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்.
தேவையான பொருட்கள்-1 கப் சுத்தம் செய்த பிரண்டை,3 பச்சை மிளகாய்,2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,1 டேபிள்ஸ்பூன் உளுந்து பருப்புஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி,1/4 கப் தேங்காய் துருவல்,தேவையான அளவு உப்புதாளிக்க:1டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை,1/4டீஸ்பூன் கடுகு, 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1/4 டீஸ்பூன் கடலை பருப்பு,கறிவேப்பிலைசெய்முறை-பிரண்டையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வறுக்க தேவையான மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி,பருப்பு,மிளகாய் எல்லாம் சேர்ந்து நன்கு வறுத்து எடுக்கவும்.அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரண்டையை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்எல்லாம் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு,புளி கரைசல் சேர்த்து நன்கு அரைக்கவும்பின்னர் அரைத்த பிரண்டை துவையலை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து,கடுகு தாளித்து சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான பிரண்டை துவையல் சுவைக்கத்தயார்.இந்த பிரண்டை துவையல் சூடான சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்-2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு எண்ணெய்,ஒரு துண்டு கட்டி பெருங்காயம்,2ஸ்பூன் உளுந்து,3 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம்,2 துண்டு இஞ்சி,சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு ,1 கப் தேங்காய்,சிறிதளவுதண்ணீர் .செய்முறை -கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு 10 சின்ன வெங்காயம், இரண்டு துண்டு இஞ்சி, சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.2 கப் வல்லாரைக்கீரை,தேவையான அளவு உப்பு, தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.அனைத்தையும் நன்கு வதக்கி ஆறவிடவும் பிறகு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.சுவையான ஆரோக்கியமான வல்லாரைக் கீரை துவையல் ரெடி..