தேவையான பொருட்கள் -1/4 கிலோகருணைக்கிழங்கு, 2 பெரியவெங்காயம்,2 தக்காளி,6 வரமிளகாய்,1/4 கப் துருவிய தேங்காய்,1கைப்பிடி கொத்தமல்லி தழை,2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,1/4 டீஸ்பூன் கடுகு உளுந்து,2 கொத்து கருவேப்பிலை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு எண்ணெய் செய்முறை-முதலில் கருணைக்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதன் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்பிறகு ஒரு கடாயில்3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும் பிறகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு எடுத்து வைத்த கருணைக் கிழங்கின் தோல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கி5 நிமிடங்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.சுவையான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு தோல் துவையல் தயார்
தேவையானபொருட்கள்கருஞ்சீரகம் – கால் கப்(இதை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)பச்சை மிளகாய் – 2வர மிளகாய் – 4எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பூண்டு – 10 பல்பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)கல் உப்பு – தேவையான அளவுசெய்முறைஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து ஆறவைக்கவேண்டும்.அதே கடாயில் இரண்டு மிளகாய்களையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் அனைத்தும் ஆறியபின் மிக்ஸி ஜாரில் அல்லது கையில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.கடைசியாக வறுதத் கருஞ்சீரகத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் மையாக அரைத்து விடக்கூடாது.இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.கருஞ்சீரகம் பல்வேறு நன்மைகள் நிறைந்து என்பதால் இதைஅவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது
தேவையான பொருட்கள் - உருளைக்கிழங்கு (சற்று பெரியதாக )-2.கடலை மாவு -ஒரு கப், மைதாமாவு - ஒரு டேபிள்ஸ்பூன். இட்லி மாவு - 2 டேபிள்ஸ்பூன். இஞ்சி -பூண்டு விழுது -ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் -ஒரு டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. ஆப்ப சோடா - அரை சிட்டிகை.செய்முறை: கிழங்கை தோல் சீவி சற்று மெல்லிய வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். உருளை வில்லைகளை ஒவ்வொன்றாக மாவில் போட்டு எடுத்து காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து. சூடாகப் பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள் ஆப்பிள் -1, கடலைமாவு ஒரு கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால் ) -ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.செய்முறை: ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். மாவுடன், மஞ்சள்தூள், உப்பு. ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் சுரையுங்கள். எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் தனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள்.
தேவையான பொருட்கள் - பெரிய கத்திரிக்காய் - 1, கடலைமாவு - ஒரு கப், மைதாமாவு ஒரு டீஸ்பூன், அரிசிமாவு 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. ஆப்ப சோடா - அரை சிட்டிகை.அரைக்க : இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், சோம்பு ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: கத்திரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள். கடலைமாவுடன் உப்பு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு துண்டையும் மாவில் அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.
தேவையான பொருட்கள் பேபிகார்ன் - 12.கடலை மாவு ஒரு கப், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் -ஒரு டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு, ஆப்ப சோடா -சிட்டிகைஅரைக்க : பச்சை மிளகாய் -3. இஞ்சி -ஒரு துண்டு,பூண்டு - 3 பல்.செய்முறை: பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டு எடுங்கள். மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து ,இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.
தேவையான பொருட்கள் - பனீர் 200 கிராம். கடலைமாவு -ஒரு கப்.மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை. எண்ணெய் - தேவையான அளவு.பொடிக்க : சீரகம் -அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்.செய்முறை: பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன்எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்..
தேவையான பொருட்கள் - புடலங்காய் (சிறியதாக)2.கடலைமாவு ஒன்றரை கப், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா -ஒரு சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.பச்சை மிளகாய் 2. இஞ்சி ஒரு துண்டு. மஞ்சள்தூள்ஸ்டஃப் செய்ய: உருளைக்கிழங்கு 2. பெரிய வெங்காயம் - 1, கால் டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசியுங்கள்.வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு. உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி. உருளைக்கிழங்கை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். புடலங்காயை கழுவி, வட்டமாக சிறு துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டெடுங்கள். அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடையுங்கள். கடலை மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கரையுங்கள். மிதமான தீயில் எண்ணையைக் காயவைத்து. புடலங்காய் துண்டுகளை மாவில் போட்டு எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுங்கள்.
நெல் பொரி அல்லது அரிசிப் பொரியை நெய்யில் வறுத்து, முறுவலான வெல்லப்பாகில் ஏலக்காய் தூள் கலந்து, பொரியினை கொட்டி, கிளறி உருண்டையாக பிடித்தால் சுவையான கார்த்திகை தீபப் பொரி தயார்.
தேவையான பொருட்கள் : காய்கறி கலவை - 2 கப் (பொடியாக நறுக்கியது). பெரிய வெங்காயம் -1, தயிர் (சற்று புளிப்புள்ளது)- அரை கப், உப்பு -தேவைக்கு. அரைக்க: இஞ்சி ஒரு துண்டு,பூண்டு 5 பல், பச்சைமிளகாய் - 5, முந்திரி -6, கசகசா - 2 டேபிள்ஸ்பூன். தேங்காய் துருவல் - கால் கப். தாளிக்க: பட்டை- ஒரு துண்டு, லவங்கம் -1. ஏலக்காய்-2 எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.செய்முறை: நறுக்கிய காய்கறிகளை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் போட்டு மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் நிறம் மாறாமல் காய் வெந்திருக்கும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேருங்கள்.வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து சிறு தீயில் வைத்து வாசனை போக வதக்கி காய்கறிகளையும், உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். தயிரைக் கடைந்து சேர்த்து கிளறி இறக்குங்கள்.