25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


சமையல்

Nov 22, 2024

பாசிப்பருப்பு வடை

 தேவையான பொருட்கள் :- பாசிப்பருப்பு 50 கிராம், பச்சரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்,இட்லி மாவு ஒரு பெரிய கப், மிளகாய் பொடி ஒரு எஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, வெங்காயம் 50 கிராம், மிளகாய் 5 பொடியாக நறுக்கியது. தேங்காய் கால் மூடி,செய்முறை பாசிப்பருப்பை சிறிது ஊற வைக்கவும், பின்னர் இட்லி மாவுடன் மேல கூறிய அனைத்தையும் கலந்து எண்ணையில் பொரித்தெடுக்க சுவையான கரகர, மொறுமொறு பாசிப்பருப்பு வடை ரெடி.

Nov 22, 2024

பாசிப்பயறு வடை

 தேவையான பொருட்கள் : பாசிப்பயறு 100 கிராம், தட்டாம் பயறு 100 கிராம்,வத்தல் 2, சீரகம் கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிதளவு.செய்முறை பாசிப்பயறு, தட்டாம் பயறு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கரகரப்பாக அரைத்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Nov 22, 2024

வாழைக்காய், கீரை வடை

 தேவையான பொருட்கள்: வாழைக்காய் சிறியது 2, ஏதாவது ஒரு கீரை சிறியகட்டு, மிளகாய் 6, இஞ்சி ஒரு துண்டு, கொத்தமல்லி கருவேப்பிலை வெட்டியது, வெங்காயம் 1 பெரியது, உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவுசெய்முறை - வாழைக்காய் வேக வைத்துக் கொண்டு, பொடிமாசிற்குத் துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், கீரை முதலியவைகளைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து வடை தட்டி எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும். தயிரில் போட்டுத் தயிர் வடையாகவும் சாப்பிடலாம். 

Nov 22, 2024

வாழைப்பழ இனிப்பு வடை

 தேவையான பொருட்கள் - வாழைப்பழம் நாட்டுப்பழம் 2, சீனி 400 கிராம், பால் 200 கிராம்,ரவை 400 கிராம், தேங்காய் ஒரு கப், ஏலக்காய் சிறிதளவு, ரீபைன்ட் ஆயில், பொரிப்பதற்குசெய்முறை -  பாலில் சீனியையும் ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காய் பூ, வாழைப்பழம், ஆகியவற்றை ரவையுடன் ஏலக்காயும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை சிறிது சிறிதாகப் போடவும், சிவக்க வெந்ததும் எடுத்து விடவும். மிகவும் சுவையாக இருக்கும். வாழைப்பழம் போட்டு பிசைந்தவுடன் எண்ணையில் பொரித்து எடுத்து விட வேண்டும். இல்லையெனில் மாவு நீர்த்து விடும்.

Nov 22, 2024

ஐவ்வரிசி கார வடை

 தேவையான பொருட்கள் :- ஐவ்வரிசி 100 கிராம் அரிசி மாவு 75 கிராம், புளித்த மோர் அரை கப், காரப் பொடி 2 டீ ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிப்பதற்குசெய்முறை  - ஐவ்வரிசியைப் புளித்த மோரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஐவ்வரிசி நன்கு ஊதிய பிறகு அதனுடன் அரிசி மாவு, காரப் பொடி, பெருங்காயப் பொடி மற்றும் உப்பு தூள் போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். மாவு உருட்டிப் போடும் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் போட்டு எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். மாவை வடைபோல் தட்டிக் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த வடையைச் சுவைக்க மிகவும் ருசியாக இருக்கும்.

Nov 15, 2024

பனீர், முட்டை இட்லி.

Costly யான  பனீர் இட்லி . 3 முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும் அதனுடன் பனீர் 50 கிராம் மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் நன்றாக வதக்கி அந்த பனீர் கலவையில் சேர்த்து இட்லி சட்டியில், இட்லி போல ஊற்றி வேக வைக்கலாம் .

Nov 15, 2024

சப்பாத்தி ரோல்

ஒரு கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு -1ஸ்பூன், கறிவேப்பிலை-1 கொத்து, நறுக்கிய வெங்காயம்-2, பூண்டு-5, நறுக்கிய தக்காளி-6, கீறிய ப.மிளகாய் -2, மஞ்சள் தூள்-1/4ஸ்பூன், மிளகாய் தூள்-1/2 ஸ்பூன், உப்பு பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு வதக்கி, சிறு துண்டு வெல்லம் சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடலாம். சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் போல உருட்டி சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Nov 15, 2024

பச்சைப்பயறு தோசை

இரவு தூங்க செல்லும் முன் 1கப் பச்சை பயிறை ஊற வைத்து கொள்ளுங்கள், காலையில் ஒரு மிக்சி ஜாரில் அதை சேர்த்து 2பச்சை  மிளகாய், 1 துண்டு இஞ்சி, 1ஸ்பூன் சீரகம், தேவைக்கு உப்பு, 1கைப்பிடி கொத்தமல்லி, சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்து கொள்ளுங்கள். தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து தோசை வார்த்து எடுக்க சத்தான, ஆரோக்கியமான பச்சைப்பயறு தோசை ரெடி. கார சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும். வாரத்தில் ஒரு முறை.இந்த தோசை சாப்பிடுங்க

Nov 15, 2024

சேமியா தயிர் சாதம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு: முந்திரி ஆகியவற்றைப் போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு சேமியாவை வேக வேண்டும் சேமியா நன்றாக குழைய வேக வைத்து ஆறிய பின் தயிர் பால் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சேமியா  தயிர் சாதம் தயார்.

Nov 15, 2024

ஒயிட் குஸ்கா

குஸ்கா தென்னிந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். இதை குருமாவுடன் சேர்த்து சாப்பிடவே மக்கள் விரும்புவார்கள். உருது மொழியில்‘குசுக்’ என்றால்‘உலர்ந்த’ என்று பொருள். இந்த உணவும் உலர்ந்து இருப்பதால் குஸ்கா என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன வீட்டிலேயே செஞ்சு அசத்திட வேண்டியதுதானே! சரி வாங்க. ஒயிட் குஸ்கா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.தேவையானபொருட்கள்:பாஸ்மதி அரிசி-1 ½ கிலோ.நெய்- 1 குழிக்கரண்டிஎண்ணெய்-1 குழிக்கரண்டி.கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை- தேவையான அளவு.முந்திரி -10பாதாம்-20நறுக்கிய வெங்காயம்-2பச்சை மிளகாய்-6இஞ்சி பூண்டு விழுது- 1 ½ தேக்கரண்டி.கொத்தமல்லி, புதினா- தேவையான அளவு.தயிர் -200கிராம்.தக்காளி-1 ½.உப்பு- தேவையான அளவு.செய்முறைவிளக்கம்:முதலில் ½ கிலோ பாஸ்மதி அரிசியை கழுவி ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு நன்றாக அகண்ட பாத்திரத்தில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய், ஒரு குழிக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் மசாலா பொருட்களான பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 6 சேர்த்து அத்துடன் 10 முந்திரி பருப்பை சேர்க்கவும். நன்றாக கோல்டன் பிரவுன் ஆன பிறகு அதோடு 1 ½ தேக்கரண்டி  இஞ்சி பூண்டு  விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அத்துடன் கொத்தமல்லி, புதினா ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும். ஒயிட் குஸ்காவிற்கு தயிர் மிகவும் முக்கியமானது அதுவே புளிப்பு சுவையை தரும். அதனால் 200 கிராம் தயிரை சேர்த்து நன்றாக வதக்கவும்.இப்போது 20 பாதாமை ஊற வைத்து தோலூரித்து அரைத்து செய்த கலவையை அத்துடன் சேர்க்கவும். மேலும், 1½ தக்காளியை கடைசியாக சேர்த்துவிட்டு குஸ்காவிற்கு தேவையான உப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் வடிகட்டி வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும். 10 நிமிடத்திற்கு பிறகு   திறந்து புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து மூடிப்போட்டு குஸ்காவை தம்மில் வைத்துடுங்க. அரைமணி நேரம் குஸ்காவை நன்றாக வேகவைத்த பிறகு இறக்கிவிடவும். சூப்பரான ஒயிட் குஸ்கா தயார். 

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 52 53

AD's



More News