தேவையான பொருட்கள்-2 கப்தினை,2 மேஜை கரண்டி அரிசி,½கப்முழு உளுந்து,1 தேக்கரண்டி வெந்தயம்,1கப் பீட்ரூட், வேகவைத்து துருவியது,1 அங்குலம் இஞ்சி, தோலுரித்தது,4பச்சை மிளகாய்,½கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது.2 மேஜை கரண்டி கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, 1 தேக்கரண்டி ஈஸ்ட், தேவையான எண்ணெய்,தேவையான உப்பு.செய்முறை- ஓரு குக்கரில் பீட்ரூட், நீராவியில் வேகவைத்து பின் தோலுரித்து துருவவும்.மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் தினை, அரிசி லேசாக வறுக்கவும். பொறிந்து வாசனை வரும். வேறொரு பாத்திரத்திக்கு மாற்றி 6 கப் நீர் சேர்த்து ஊறவைக்கவும். உளுந்து , வெந்தயம் 3 கப் நீரில் 6 மணி நேரமாவது ஊறவேண்டும். வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து, வெந்தயம் பிளேண்டரில் போட்டு மழ மழ வென்று அரைக்கவும். பின் தினை, அரிசி, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைக்க. மாவுகளை ஒன்றாக சேர்க்கவும். அன்றே தோசை செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். ஈஸ்ட் சேர்த்து ,ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவி எப்பொழுதும் போல தோசை செய்வது போல சுடவும் .தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். 2,3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார்.
தேவையான பொருட்கள்-1கப் முழு ராகி,1/4கப் கொள்ளு,2டேபிள்ஸ்பூன் மாவு ஜவ்வரிசி,1ஸ்பூன் வெந்தயம், தேவையானஅளவு உப்புசெய்முறை - தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி8,10மணி நேரம் ஊற வைக்கவும்.8மணி நேரம் கழித்து,ஊற வைத்தவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து,தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.மாவை மிகவும் தண்ணீயாக கலக்காமல்,இட்லி பததிற்கே தயார் செய்து,8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில், தோசைக்கு தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், மெல்லியதாக விரித்து விடவும். எண்ணெய் சேர்க்காமலேயே மொறு மொறு மொறுப்பாக வரும்.சுவையான,சத்து நிறைந்த தோசை ரெடி.தக்காளி,புதினா,மல்லி,தேங்காய் சட்னி,என எல்லா சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-1கப் தினை,1/4கப் உளுந்து,1/4ஸ்பூன் வெந்தயம்,1/4கப் சிவப்பு அவல், தேவையானஅளவு உப்பு, தேவையான எண்ணெய்.செய்முறை - தினை, உளுந்து, வெந்தயம், அவல் எடுத்து வைத்துக்கொள்ளவும். இவற்றை6மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.இதை6மணி நேரம் புளிக்க வைக்கவும். அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும்,தோசை வார்க்கவும். சுற்றி ஆயில் ஊற்றவும். சூப்பரான தோசை ரெடி.
தேவையான பொருட்கள் - 2 கப் குதிரைவாலி அரிசி, முக்கால் கப் இட்லி அரிசி,முக்கால் கப் உளுந்து, அரை ஸ்பூன் வெந்தயம்செய்முறை - குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஐந்து முறை கழுவ வேண்டும். பின்னர் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறிய பின்னர், ஊறவைத்த தண்ணீரை வைத்தே மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து கரைத்து 6 லிருந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.பின்னர் தோசை மாவு பதத்திற்கு கரைத்து, தோசை கல்லில் நெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும்.ஆரோக்கியமான குதிரைவாலி தோசை தயார். சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்கடலை மாவு- 2 கப்.பிரட்-3 சதுர துண்டுகள்சமையல்சோடா- 1 பின்ச்உப்பு -தேவைக்குமிளகாய்தூள் - 1ஸ்பூன்பச்சைமிளகாய் 1சின்னவெங்காயம்- 10சமையல் எண்ணெய் தேவைக்குகருவேப்பிலை - 1 கொத்துபெருங்காயம்- கால்ஸ்பூன்தண்ணீர்- தேவைக்குசெய்முறை முதலில் கடலை மாவை சல்லடையில் அலசி வைத்துக்கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்துவைத்துக் கொள்ளவும்.கடலைமாவு,உப்பு, மிளகாய் தூள்,சோடாஉப்பு 1பின்ச்,பெருங்காயம், கட் பண்ணியவெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை,தண்ணீர் சேர்த்துவடை பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.பிரட் துண்டுகளை சிறிதுசிறிதாக பிய்த்து கைகளால் உதிர்த்துவிடவும்.பின் மாவை பிரட் உடன் சேர்த்து கலந்து விடவும்.வடை கரண்டியில் எண்ணெயில் ஊற்றும் அளவு மாவுபதம் இருக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சுடனாதும் மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும்.இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுத்துவிடவும்.பிரட்கார வடை ரெடி.
தேவையான பொருட்கள்4 துண்டுகள்பிரட், 2 வாழைப்பழம், தேவைக்குசர்க்கரை,1 கப் காய்ச்சியபால்செய்முறை முதலில்வாழைப்பழத்தைவட்டமாககட்பண்ணிஎடுத்துவைத்துக்கொள்ளவும்.பிரட் எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து கொஞ்சம்நெய்விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும்.சர்க்கரைலேசாக கரைந்துவரும்போது வாழைப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும்.வாழைப்பழத் துண்டுகள் கோல்டன் பிரெளன் கலர் வந்ததும் திருப்பிப்போடவும். வாழைப்பழத்துண்டுகளைத்தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம்நெய்விட்டு பிரட்டை டோஸ்ட் பண்ணவும்.பிரட்டைத்திருப்பிப் போடவும்.அதில் காய்ச்சிய பாலை கொஞ்சம்விடவும்.உடனேபிரட் மேலே டோஸ்ட்வாழை பழத்தைவைக்கவும்.1 நிமிடத்தில் பாலைபிரட் எடுத்துக் கொள்ளும். உடனே மெதுவாக எடுக்கவும்.பால் சேர்த்ததால்பிரட் ரொம்ப சாப்டாக இருக்கும்.அதனால்மெதுவாக எடுத்து தட்டில்அப்படியே வைத்து குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிடவும்.குழந்தைகளுக்கு மேலே nuts தூவிக்கொடுக்கலாம்.காலை Breakfast,மாலைடிபனுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள் 5பிரட் துண்டுகள் -1பெரிய வெங்காயம்2 தக்காளி , 2 பச்சை மிளகாய் , 1ஸ்பூன்சீரகம்1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்1ஸ்பூன்மிளகாய் தூள் ,1ஸ்பூன்தனியா தூள்,1 ஸ்பூன்கரம் மசாலா ,1ஸ்பூன்பட்டர்,தேவைக்கேற்பதண்ணீர்,தேவையான அளவுஎண்ணெய்,தேவையான அளவுஉப்பு செய்முறைமுதலில் பிரட் துண்டுகளை நான்கு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பட்டர் இளகியவுடன் அதில் வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்பின் மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும்.பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.இதனுடன் தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்க வேண்டும்.மசாலா வெந்தவுடன் வதக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியாக ஒரு கை அளவு கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கவும்.இப்போது சுவையான பிரட் சில்லி தயார்.
தேவையான பொருட்கள்12 ரொட்டித் துண்டுகள்2 உருளைக்கிழங்குசிறிதளவுகேரட் பீன்ஸ் பட்டாணிஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுகால் ஸ்பூன் மஞ்சள் தூள்அரை ஸ்பூன் கரம் மசாலாகால் ஸ்பூன் சீரகத்தூள்2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கால் ஸ்பூன் ஓமம்சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள்பொறிக்க தேவையான அளவு எண்ணெய்செய்முறை காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்தி வேகவைத்து கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தயார் படுத்திக் கொள்ளவும்.ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை வெட்டி லேசாக தண்ணீரில் நணைக்கவும்.ரொட்டி துகள்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்வேக வைத்த காய்கறிகளை மசித்து கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா ஓமம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து செய்யவும்.நனைத்த ரொட்டித் துண்டுகளின் நடுவில் வேகவைத்த காய்கறி கலவைகளை உருட்டி வைத்து, அதனை ரொட்டி துண்டால் மூடி ரொட்டித் துகள்களில் பிரட்டி உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டைகளை காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் அருமையான சுவையான ஆரோக்கியமான வெஜ் மசாலா பிரட் உருண்டை தயார் .
தேவையான பொருட்கள்12 ஸ்லைஸ்வீட் பிரெட்1சின்ன எலுமிச்சம் பழம்1பெரிய வெங்காயம்1மீடியம் சைஸ் தக்காளி1 சின்ன குடமிளகாய்2 பச்சை மிளகாய்சிறு துண்டுஇஞ்சி1ஸ்பூன்தனி மிளகாய் தூள்1டீ ஸ்பூன்மஞ்சள் தூள்உப்பு ருசிக்குதாளிக்க:-1 டீ ஸ்பூன்கடுகு, 1ஸ்பூன் க.பருப்பு,1ஸ்பூன்உ.பருப்பு,2 சி.மிளகாய்,2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை,தேவைக்கு கொத்தமல்லி இலைஅலங்கரிக்க:-நறுக்கின வெங்காயம், குடமிளகாய் கொத்தமல்லி தழைசெய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, குடமிளகாயை பொடியாக நறுக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்.பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி, சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். தாளித்ததும், வெங்காயம், ம.தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, வதக்கவும்.வதங்கியதும், தக்காளி, குடமிளகாய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.அடுத்து பிரெட் துண்டுகளை போடவும்.பின் பிரெட் உடையாமல் கிளறி, எலுமிச்சை சாறை ஊற்றி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறி இறக்கவும்.இறக்கினதும், பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வீட் பிரெட் வெஜ் உப்புமா*தயார்.
தேவையான பொருட்கள் - பிரெட் - 4 ஸ்லைஸ், கடலைமாவு ஒரு கப்.அரிசிமாவு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன். பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் - 2. மல்லித்தழை - சிறிது. எண்ணெய் - தேவையான அளவு.பச்சை சட்னிக்கு : புதினா - அரை கப், மல்லி - அரை கப். பச்சை மிளகாய் 1, எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.கார (சிவப்பு) சட்னிக்கு : காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 3 பல்,வெல்லம் ஒரு டீஸ்பூன், புளி சிறிய துண்டு, உப்பு - சுவைக்கேற்ப.செய்முறை:சட்னிகள் இரண்டையும் தனிதனியே நைஸாக அரையுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டுங்கள். குறுக்காக வெட்டி முக்கோண துண்டுகளாக்குங்கள். ஒரு துண்டின் மேல் பச்சை சட்னி, மற்றொன்றின் மேல் கார சட்னி தடவுங்கள். கடலை மாவு முதல் ஆப்ப சோடா வரை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். சட்னி (பச்சை) தடவிய பிரெட் ஸ்லைஸின் மேல் சிறிது வெங்காயம், மல்லித்தழை தூவி கார சட்னி ஸ்லைஸால் மூடுங்கள். எண்ணெயை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுங்கள்.