தேவையான பொருட்கள்: ஆப்பிள் துருவியது 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம்,நெய் - 100 மில்லி, ஏலத்தூள் – சிறிதளவு, பால் - 200 கிராம்,முந்திரிப்பருப்பு – சிறிதளவு ,கேசரி பவுடர் – சிறிதளவு,சர்க்கரை - 400 கிராம்செய்முறை - பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இருகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும் இது சுவையாக இருக்கும். உடம்புக்கு சத்தானது குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள்.
தேவையான பொருட்கள்: சர்க்கரை-400 கிராம், பாதாம் பருப்பு-200 கிராம், நெய்-400 கிராம்,குங்குமப்பூ-1கிராம்,லெமன் எல்லோ பவுடர் - 1 சிட்டிகை,ஏலக்காய் - 5 கிராம்செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு2 நிமிடங்கள் கழித்து, அவைகளை உரித்து பின்பு தண்ணீரில் 2.3 முறை அலசி எடுத்துக் கொள்ளவும் அலசிய பாதாம்பருப்புகளை100 மி.லி தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் வாணலியை ஏற்றி அதில் பாதாம் பருப்பு விழுது,சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரை கிளற வேண்டும். பின்பு வாணலியைக் கீழே இறக்கி பாதாம்பருப்புவிழுது, சர்க்கரை கலவையில் நெய்விட்டுக் கிளற வேண்டும். அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் கிளறினால் அல்வாவின் நிறம் மாறி வரும் என்பதால் தான் வாணலியை இறக்கிய பின்பு நெய் ஊற்றிக் கிளற வேண்டும். நெய்விட்டு நன்கு கிளறிய பின்பு அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். பின்பு அதில் ஏலப்பொடி, குங்குமப்பூ போட வேண்டும்.
தேவையான பொருட்கள்: சாம்பா கோதுமை 1 டம்ளர்,நெய் -முக்கால்( அ )1 டம்ளர்,முந்திரி 75 கிராம் ,அல்வா பவுடர் - அரை டீஸ்பூன்,ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்செய்முறை - கோதுமையை முதல் நாளே ஊற வைக்கவும்.ஊறவைத்த கோதுமையை மிருதுவாக அரைத்துக்கொள்ள வேண்டும் அதை சுத்தமான வெள்ளைத்துணியில் போட்டு வடி கட்டி பால் எடுக்கவும்.மீண்டும் அந்த மாவை நன்கு அரைத்து, வெள்ளை துணியில் போட்டு வடிகட்டி பால் எடுக்கவும். இதே போல் நாலைந்து முறை செய்ய வேண்டும். வடிகட்டிய பாலை பாத்திரத்தில் ஊற்றி துணியால் மூடி வைக்கவும், சில மணி நேரம் கழித்துப் பார்த்தால் மேலாகத் தெளிந்த நீர் இருக்கும். அதை வடிகட்டி எடுத்துவிட வேண்டும்.அடியிலுள்ள கோதுமை மாவு கூழ்போல் காணப்படும். இதில் அல்வா பவுடரைக் கலந்து வைக் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுக்கவும் அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து சக்கரையைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து, கம்பிப் பாகு வைக்கவும்.நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும். கூழ் வெந்து வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அடுப்பு குறைந்த தீயில் எரிய வேண்டும். கைவிடாமல், அடி பிடிக்காமல் கிளற வேண்டும். எல்லாம் சேர்ந்து நன்கு வெந்தததும், அதில் ஊற்றிய நெய் தனியே பிர்ந்து வரும். கையில் தொட்டுப் பார்த்தால் ஒட்டாது அகலமான தட்டில் நெய் தடவி அல்வாவைக் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அல்வா மீது தூவவும். கோதுமை அல்வா தயார்.
தேவையான பொருட்கள் - 100 gm சாமை ,125_150 கிராம் வெல்லம் பொடித்தது ,1/2 தம்ளர் பால், 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,1டேபிள்ஸ்பூன் நெய் ,10 முந்திரி பருப்பு ,1/2 டீஸ்பூன் ஏலக்காய் - சுக்கு பொடிசெய்முறை - சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவி விட்டு வேறு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர் அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும்.15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாக இருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சுக்கு பொடி எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.ஏலக்காய் சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் வாசமாக சுவையாக இருக்கும்.சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும்.வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.சுவையான சாமை பாயசம் தயார். சிறு தானியத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து விரத காலத்தில் நமக்கு உடல் சக்தியைக் கொடுக்கும்
தேவையான பொருட்கள் - 3 வாழைப்பழம் , 1/4 கப்சர்க்கரை ,1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,10 முந்திரி,10 திராட்சை, 1 - 1/2 கப் பால் , 1/4 கப்கன்டஸ்டென்ட் மில்க்செய்முறை - வாழைப்பழத்தில் தோல் உரித்து சின்ன துண்டுகளாக கட் செய்து மசிக்கவும்.கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சைகளை வறுத்து எடுக்கவும். பின்னர் கடாயில் மதித்து வாழைப்பழத்தை போட்டு கிளறவும்.பின்னர் அதில் பால் சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்க்கவும். பின்னர் கன்டஸ்டென்ட் மில்க் சேர்த்து கொதிக்க விட்டு முந்திரி திராட்சைகளை சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான வாழைப்பழ பாயாசம் ரெடி.
தேவையான பொருட்கள் - 100 கிராம் குதிரைவாலி அரிசி ,1/2 கப் மில்க்மெய்ட் ,2 லிட்டர் பால் , தேவையானஅளவு சர்க்கரைதாளிக்க - 3 மேஜைக்கரண்டி நெய் ,2 மேஜைக் கரண்டி முந்திரி , 2 மேஜைக்கரண்டி பாதாம்செய்முறை- ஒரு அடிகனமான பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியைக் கழுவி சேர்க்கவும். இதோடு காய வைத்த பாலை சேர்த்து அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் அரிசி வேகும் வரை கிளறிக்கொண்டே வேக வைக்கவும்.அரிசி வெந்தபின் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின் மில்க் மெய்டு சேர்த்து கலக்கவும்.தாளிக்க நெய் சேர்த்து உருகியதும் நீளமாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலக்கவும்
தேவையான பொருட்கள்: இன நுங்கு -5, பசும்பால் 1 லிட்டர், மில்க்மெய்டு -1 கப், சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூன் -1/2 ஸ்பூன், பாதாம் பருப்பு துருவல் - 2 டீஸ்பூன், செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பாலில் மில்க்மெய்டை ஊற்றி 15 நிமிடங்கள் 'சிம்மில் வைத்து கிளறி, ஏலக்காய் மற்றும் நுங்குகளை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும்.அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பாதாம் துருவலை கலக்கவும். சுவையான நுங்கு பாயசம் தயார். இதை குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து பரிமாறினால் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - 1/2கப் கருப்பு கவுணி ,3/4 கப் சக்கரை 3 கப் பால்,2 டீஸ்பூன் நெய் , முந்திரி, ஏலக்காய் தேவையான அளவு செய்முறை- முதலில் கவுணி அரிசியை நன்கு கழுகி அதன் பிறகு8மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.ஒரு குக்கரில் கவுணி அரிசி 3 பங்கு தண்ணி (1கப் பால் + 2கப் தண்ணி)விட்டு மீடியும் ஹீட்டில் 6-7 விசில் விட்டு ஸ்டவ் ஆப் செய்துடவும்.பிரஷர் போன பிறகு குக்கரை திறந்து பார்த்தால் நன்றாக வெந்திருக்கும்., அதை சூடாக இருக்கும்போதே நன்றாக மசித்து விட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்அதன் பிறகு சக்கரை,சேர்த்து நன்கு கிளறி,அத்துடன் மீதி பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக சிம்மில். வைத்து கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும்.கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்... மிக ஆரோக்கியம் மிக்க சுவையுடன் கூடிய கருப்பு கவுணி பால் பாயசம் தயார்.
தேவையான பொருட்கள் – 1 கப் தாமரை விதை , அரைலிட்டர் பால்,தேவையான அளவு மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை தேவையான அளவுதேவையான அளவுநெய் , தேவையான அளவு முந்திரி திராட்சை , தேவையான அளவு பாதாம் செய்முறை - ஸ்டவ் ஆன் செய்து ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.மற்றொரு ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தாமரை விதைகளை போட்டு சிறிது நெய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.நன்றாக காய்ச்சிய பாலில் மில்க்மெய்ட் சேர்த்து தாமரை விதைகளை சேர்த்து நன்றாக கிளறவும். 15 லிருந்து20 நிமிடம் வரை நன்றாக கொதிக்கவிடவும்.அதில் தேவையான அளவு மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை சேர்த்து இறக்கவும்.பின் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் திராட்சை நன்றாக வறுத்து எடுத்து அதில் கலந்து கொள்ளவும்.சுவையான தாமரை விதை பாயாசம் தயார்.
தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2 1/2 கிலோ, பூண்டு – 1/4 கிலோ, உளுத்தம்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடுகு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் தூள் – 50 கிராம், தனியா தூள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 4 கொத்து, உப்பு – 100 கிராம், (நல்லெண்ணெய் – 50 ml தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன்).செய்முறை:முதலில் வெங்காயத்தை மட்டும் சிறியதாக(பொடிப் பொடியாக), நறுக்கிக் கொள்ள வேண்டும். கையில் நறுக்க முடியாதவர்கள், வெங்காயத்தை தோலுரித்து, நான்காக வெட்டி, மிக்ஸியில் போட்டுpush பட்டன் வைத்துக்கூட சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வார்கள். மிக்ஸியில் போட்டு மொழுமொழுவென்று அரைத்து விடக்கூடாது. ரிவர்ஸ் பட்டன் வச்சு ஒரு ஓட்டு ஓட்டிகோங்க.அடுத்ததாக பூண்டு. பூண்டின் மேல் தோலை மட்டும் உரித்து தனித்தனி திரிகளாக எடுத்துக்கொண்டால், போதும். உள்ளே இருக்கும் தோலை உரிக்க வேண்டாம். அதை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டி ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது நல்ல பெரிய, குவாலிட்டியான பிளாஸ்டிக் டப்பாவை, எடுத்துக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைத்திருக்கும் பூண்டு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, தனி மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மேல் குறிப்பிட்டுள்ள அளவின்படி, சேர்த்து ஒரு கரண்டியை போட்டு, எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கி, வைத்துவிடவேண்டும். முடிந்தால் பக்கெட்டோடு எடுத்து, ஒரு குலுக்கு குலுக்கி வைத்து விடலாம். ஒரு வெள்ளைத் துணியை அந்த பக்கெட்டின் மேல், நூல் போட்டு கட்டி மூடி வைத்துவிட வேண்டும். தட்டு போட்டு மூடக்கூடாது.இரண்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். மூன்றாவது நாள் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை, ஒரு தாம்பாளத் தட்டில் மேல், பெரிய பிளாஸ்டிக் கவராக விரித்து, அதன் மேல் இந்த கலவையை கொட்டி வெயிலில் காய வைக்க வேண்டும். வெங்காயத்தில் லேசாக தண்ணீர் விட்டிருக்கும். அதோடு சேர்த்து வெயிலில் காய வைத்து விடுங்கள். 5ல் இருந்து9 நாட்கள் வரை, வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காயவைக்கவேண்டும். வெங்காயத்தில், ஈரப்பதம் உள்ளதா என்பதை, பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். ஐந்து நாட்களுக்குப் பிறகு6வது நாள்,7வது நாள், எந்த நாளில் வேண்டுமென்றாலும் பின்வருமாறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்(அதிக வெயிலில் ஒன்பது நாள் வரை காய வைத்தீர்கள் என்றால் மொறுமொறுவென்று ஆகிவிடும். உருண்டை பிடிக்க வராது.)