25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஸ்டஃப்டு புடலை தால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்டஃப்டு புடலை தால்

தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு - ஒரு கப், சற்று மெல்லிய, சிறிய புடலை -1, தேங்காய்பால் - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்), 

ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீன்ஸ் - 5, பச்சை மிளகாய் 2,இஞ்சி ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: பெரிய வெங்காயம் -1, காய்ந்த மிளகாய் -2, கறிவேப்பிலை -சிறிது,நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும்வரைவறுத்தெடுங்கள். பின்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை நன்கு அரைத்து அதில் சேருங்கள். அதோடு உப்பையும் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதித்தபின் இறக்கி, தேங்காய் பாலை ஊற்றுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை இரண்டாக கிள்ளுங்கள். நெய், எண்ணெயைக் காயவைத்து, மிளகாய் சேர்த்து வறுத்து. வெங்காயம். கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பருப்பில் சேருங்கள்.இதுதான் தால்.

புடலையை 2 அங்குல நீளத்துக்கு முழுதாக வெட்டிக்கொள்ளுங்கள். அதனுள்ளிருக்கும் விதையை நீக்கிவிடுங்கள். உப்பு கலந்த நீரில் வேகவைத்து எடுங்கள். (உடையாதபடி கவனமாக கையாள வேண்டும்). உருளை, கேரட்டை, தோல் சீவி, பீன்ஸுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கையால் மசித்துவிடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை கரகரப்பாக அரைத்து எண்ணெயில் தாளித்து, காய்கறியில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு. உப்பு சேர்த்து பிசைந்து புடலையினுள் அடைத்துவிடுங்கள். பரிமாறும் பாத்திரத்தில் இதனை அடுக்கி அதன்மேல் தாலை ஊற்றி, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News