25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையல்

Apr 25, 2025

மஸ்ரூம் ஊறுகாய் ( mushroom pickel )

தேவையான பொருட்கள் -  ஒரு கப் நல்லெண்ணெய் ,ஒரு பாக்கெட் மஸ்ரூம் ,கால்ஸ்பூன் கடுகு பொடி,இரண்டு ஸ்பூன்எலுமிச்சை பழச்சாறு,தேவையான அளவு உப்பு,கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்,அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்,அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்,ஒருஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுசெய்முறை -  மஸ்ரூம் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கரம் மசாலாத்தூள் ,கடுகு தூள், உப்பு,சேர்த்து வதக்கவும்.மஷ்ரூம் நன்றாக வெந்ததும், கடைசியாக எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்கவும். ஊறுகாய் ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் உபயோகப்படுத்தலாம்.

Apr 18, 2025

காளான் தொக்கு. (Mushroom Thokku) 

தேவையானவை:காளான் - 1 கப் (நறுக்கியது)நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்உப்பு -தேவையான அளவுஎண்ணெய் - 2 டீஸ்பூன்கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவுகரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்சாம்பார்பொடி தனியாதூள். 1 டீஸ்பூன்செய்முறை:முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் சாம்பார்பொடி, கரம்மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்மசாலா உடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும் பின் உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு வேகவைக்கவும் காளான் நன்றாக வெந்து நீர் வற்றியதும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Apr 18, 2025

இஞ்சி தொக்கு. (Ginger Thokku)

 தேவையானவை :இஞ்சி -1/4கிலோஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் -தேவையான அளவுபச்சை மிளகாய்-50 கிராம்புளி - 100 கிராம்வெல்லம் - சிறு துண்டுதாளிக்க தேவையானவை :கடுகு -1ஸ்பூன்,வெந்தயம் -1 ஸ்பூன், எண்ணெய் - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன் செய்முறை;நான்கு கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயைக் கறிக் கொள்ளவும் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் வாணலியில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் இதில் அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.

Apr 18, 2025

பூண்டு தொக்கு  ( Garlic Thokku )

தேவையான பொருட்கள்:பூண்டு - 20 லிருந்து 25மிளகாய் பொடி-2 tbspsகொத்தமல்லி பொடி-1tbspகடுகு-1 tspவெந்தையம்-1 tspபெருங்காய பொடி-3tspகறிவேப்பிலை- தேவைக்கேற்பபுளி - சிறிய எலுமிச்சை அளவுஉப்பு-தேவைக்கேற்பநல்லஎண்ணெய்-2 தேக்கரண்டியளவுசெய்முறைமுதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.1/4  tsp கடுகையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகையும் வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி பூண்டையும் சேர்த்து வதக்கவும்."நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள் கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.

Apr 18, 2025

வெங்காய தொக்கு. (Onion Thokku)

தேவையானவை :பெரிய வெங்காயம் 1/2 கிலோ (பொடித்தது)பூண்டு - 10 பல் (நசுக்கியது)வினிகர் 1/4 கப்சோம்பு 1/2டீஸ்பூன்கடுகு 1 டீஸ்பூன்எண்ணெய் 1/2 கப்கருவேப்பிலை சிறிதுமிளகாய்த்தூள் 1டேபிள் ஸ்பூன்உப்பு 1 டேபிள் ஸ்பூன்வெந்தயம் 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்பெருங்காயம் - 1 டீஸ்பூன்செய்முறை :ஒரு வெறும் வாணலியில் ஊற்றி சீரகம், பெருங்காயம் வெந்தயம் சோம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும்அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து2 நிமிடம் வதக்கவும் இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

Apr 18, 2025

மாங்காய் தொக்கு  ( Mango Thokku )

தேவையானவை:மாங்காய் - 2 பெரியது (துருவியது)வற்றல் மிளகாய் தேவைகேற்பபெருங்காயம் 1 சிறு துண்டுஉப்பு -1டீஸ்பூன்நல்லெண்ணெய் 1/2 கப்வறுத்த வெந்தயப் பொடி 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை :1 வெறும் கடாயில் வற்றல் மிளகாயை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மாங்காய் துருவல், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.மாங்காய் துருவல் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கி வைக்கவும். இதை சுத்தமான ஜாடியில் வைத்து சுமார் 180 நாட்கள் உபயோகிக்கலாம்.

Apr 18, 2025

தக்காளி தொக்கு (Tomato Thokku)

தேவையானவை:தக்காளி -1 கிலோ (நறுக்கியது)மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்கடுகு-1 டீஸ்பூன்வெந்தயம் - 1 டீஸ்பூன்பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்நல்லெண்ணெய் -1/2கப்புளி விழுது – சிறிதுஉப்பு-தேவைக்கேற்பசெய்முறை :நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸ்சியில்அரைத்துக் கொள்ளவும்.வாணலியில்1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு கருவேப்பிலை பெருங்காயம் வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும். இடையிடையே கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மீதமுள்ள. எண்ணெய் புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இருபது நிமிடங்கள் வேக விடவும் எண்ணெய் மிதந்து வரும் வரை வேக விட்டு இருக்கவும்.தக்காளி தொக்கு தயார். 

Apr 11, 2025

முருங்கைப் பூ கூட்டு!

தேவையானப் பொருட்கள்:முருங்கைப்பூ- 2 கப் ,பாசிப்பருப்பு - 100 கிராம் ,பெரிய வெங்காயம் -2,தக்காளி -2,பூண்டு பல் -10 பச்சை மிளகாய் -4,எண்ணெய், கடுகு,மஞ்சள் பொடி- சிறிதளவு கறிவேப்பிலை,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்புடன் நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் தாளித்து, சுத்தம் செய்த முருங்கைப் பூ போட்டு வதக்கவும். அதில், வெந்த பாசிப்பருப்பு கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.மருத்துவ குணம் நிறைந்த, 'முருங்கை பூ கூட்டு!' தயார். சுவை அமோகமாக இருக்கும்.

Apr 11, 2025

அப்பள கூட்டு (papad curry)

தேவையானவை: உருளைகிழங்கு – 2,அப்பளம் - 8,கடலைப்பருப்பு -1/2கப்,கடுகு-1/4 ஸ்பூன்,சீரகம் - 1/4 ஸ்பூன்,மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் -1ஸ்பூன்,தனியாதூள்- 1/2 ஸ்பூன்,உப்பு-1ஸ்பூன்,வெங்காயம் -1,தக்காளி -1,பூண்டு - 3 பல்,கருவேப்பிலை – சிறிது,எண்ணெய் - 3 ஸ்பூன்செய்முறை : ஒரு குக்கரில் கடலை பருப்பு உருளைகிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி இரண்டு விசில் விடவும். கடாயில் எண்ணெய் வைத்து அப்பளத்தை பொரித்து வைக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,தனியா தூள் ,உப்பு சேர்த்து கிளறவும் பின் அதில் வேகவைத்த கடலைபருப்பு வேகவைத்த தண்ணீருடன் வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.பொரித்து வைத்த அப்பளம் உடைத்து அத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Apr 11, 2025

சுண்டைக்காய் கூட்டு .

தேவையானவை: சுண்டைக்காய் -2 கப்,பயத்தம் பருப்பு 1/2 கப்,சாம்பார் பொடி 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்ஒருசிட்டிகை,தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,பச்சை மிளகாய்-1,சீரகம் 1டீஸ்பூன்,உப்பு - 1/2 டீஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்,கறிவேப்பிலை- சிறிது சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)செய்முறை: சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில், சுண்டைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.கடைசியாக கடுகு ,வெங்காயம் ,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

1 2 ... 37 38 39 40 41 42 43 ... 68 69

AD's



More News