வரகரிசி புட்டு.
தேவையான பொருட்கள்-
½கப் வரகு அரிசி,அரை கப் பயத்தம் பருப்பு,
1கப் பொடித்த வெல்லம்,1தேக்கரண்டி ஏலக்காய் பொடி,
4 தேக்கரண்டி அதி மதுரம் பொடி,
½ தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி.½தேக்கரண்டி குங்குமப்பூ,
1கப் டெசிகெடெட் ஸ்வீடன்ட் தேங்காய் துருவல்,
. ¼கப் உருகிய வெண்ணை, 20 முந்திரி ,1/4கப் உலர்ந்த திராட்சை,
சிட்டிகை உப்பு
செய்முறை -
குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் மேஜைகரண்டி சூடான நீரில் கரைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் 1 மேஜை கரண்டி உருகிய வெண்ணையில் முந்திரி திராட்சை வறுக்கவும். திராட்சை உப்பும், முந்திரி பொன் சிவக்கும். வறுத்ததை தனியே எடுத்து வைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கவும்.
மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் வரகு, ப பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் ஒரு கிண்ணத்தில்3 கப் கொதிக்கும் பாலில் 30 நிமிடங்கள் ஊற வைக்க பின் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
மிதமான நெருப்பில் வாணலியில்½ கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்க. கிளறிக்கொண்டே இருக்க, கெட்டி பாகு பதம் வேண்டும். ½ தேக்கரண்டி சிரப் நீரில் போட்டு டெஸ்ட் செய்கவும். சுருண்டு வந்தால் பாகு தயார். நெருப்பை சிம்மர் ஆக்கவும்.வேகவைத்த வரகு, பயத்தம் பருப்பு கலவையை உதிர்த்து சிறிது சிறிதாக பாகில் சேர்த்து கிளற.. புட்டு மணல் மணலாக இருக்கும். குங்குமப்பூ, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும். ஜாதிக்காய், அதிமதுரம் துருவி கிளறவும்.மீதி வெண்ணை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். வரகரிசி புட்டு தயார்.
0
Leave a Reply