டிரை ஃப்ரூட் பாயாசம்.
தேவையான பொருட்கள்-
1/4 லிட்டர் பசும்பால்,2 துண்டு பட்டை,2 ஏலக்காய்,
2 கிராம்பு,20 மி.லி நெய் ,100 கிராம் சர்க்கரை,3 டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டு,
தேங்காய் பால் அரைப்பதற்கு - 100 கிராம் கொப்பரை தேங்காய்,2 டீஸ்பூன் கசகசா,முந்திரி பேஸ்ட் செய்வதற்கு -20 கிராம் பாதாம்,20 கிராம் முந்திரி ,1 அக்ரூட்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து ,அதில் பாதாம் மற்றும் கொப்பரை தேங்காய் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸியில் கொப்பரை தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து, அதை பால் எடுத்துக் கொள்ளவும் .மூன்று முறை அரைத்து பால் எடுத்து வடிகட்டி கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் பாதாம் ,முந்திரி, ஒரு அக்ரூட், சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு ,அதில் நெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,சேர்த்து அதனுடன் காய்ச்சிய பசும்பாலை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
கொதித்த பசும்பாலுடன் அரைத்து வைத்து தேங்காய் பால் மற்றும் பாதாம் முந்திரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
சர்க்கரை மற்றும் மில்க் மேடு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வைக்கவும்.இப்போது பாயாசம் ரெடி.
0
Leave a Reply