முருங்கைக்கீரை நூடுல்ஸ்.
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட் (முருங்கைக்கீரை நூடுல்ஸ் அல்லது சாதாரண நூடுல்ஸ்),
முருங்கைக்கீரை - 1 கப் (சுத்தம் செய்து ஆய்ந்தது),
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது),
இஞ்சி - சிறிய துண்டு (துருவியது அல்லது விழுது),
பூண்டு - 3 முதல் 4 பல் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 1 (கீறியது),
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் அல்லது நூடுல்ஸ் மசாலா - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் நூடுல்ஸை சேர்த்துவெந்ததும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும்பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவற்றுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து மிதமான தீயில் சிலநிமிடங்கள் வதக்கவும். கீரை சுருங்கி வெந்தவுடன், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள்(அல்லது நூடுல்ஸ் மசாலா) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
வதக்கிய மசாலா கலவையுடன் வேகவைத்த நூடுல்ஸைச் சேர்த்து மென்மையாகக் கிளறி,இரண்டு நிமிடங்கள் மூடி வைத்துப் பரிமாறவும். சுவையான முருங்கைக்கீரை நூடுல்ஸ் தயார்.
0
Leave a Reply