25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையல்

Mar 28, 2025

நெல்லிக்காய் துவையல்

தேவையானவை:முழு நெல்லிக்காய் –ஐந்து,காய்ந்த மிளகாய் பச்ச மிளகாய் - தலா 2, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,தேங்காய் துருவல் எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவுசெய்முறை:நெல்லிக்காயை கடாயில் லேசாக வேக வைத்து கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் ,எலுமிச்சைச் சாறு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடைசியாக நெல்லிக்காய், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் நெல்லிக்காய் துவையல் ரெடி..

Mar 28, 2025

தூதுவளை துவையல் .

தேவையானவை:தூதுவளை இலை - 2 கப்,புதினா -1 கப்,பூண்டு -4,இஞ்சி -1/2 இஞ்ச் ,சிறிய வெங்காயம் -10,சிவப்பு மிளகாய்-6,எண்ணெய் 2 டீஸ்பூன்,கடுகு-சிறிது,உளுத்தம் பருப்பு சிறிது,பெருங்காயம் சிறிது,புளி சிறிது,தேங்காய்-2 ஸ்பூன் துருவியது,உப்பு - தேவையான அளவு செய்முறை:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ,அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும்,சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். பிறகு கடைசியாக தூதுவளை இலை ,புதினா இலை போட்டு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்தால் தூதுவளை துவையல் தயார்.

Mar 28, 2025

வாழைப்பூ  துவையல்

தேவையானவை:வாழைப்பூ - ஒரு கப்,உளுத்தம்பருப்பு - அரை கப்,காய்ந்த மிளகாய் -4,புளி - 50 கிராம்,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்,மிளகு - ஒரு ஸ்பூன்,சீரகம் -அரைஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,உப்பு-- தேவையான அளவு,எண்ணெய் - 2 ஸ்பூன்செய்முறை:கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம் தேங்காய் துருவல், வாழைப்பூ ஆகியவற்றைப்போட்டு சிறிது பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.பின்னர் ஆற வைத்து புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும். வாழைப்பூ துவையல் சாப்பிட சுவையாக இருக்கும்

Mar 28, 2025

முள்ளங்கி துவையல் .

.தேவையான பொருட்கள்:1 முள்ளங்கி,1012 சின்னவெங்காயம்,3ஸ்பூன்தேங்காய்துருவல்,4பச்சைமிளகாய்,புளிசிறிதளவு ,பூண்டுபல் – 2,இஞ்சி- 1 இன்ச் ,சிறிதுமல்லி கருவேப்பிலை,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு,ஆயில் - 2 ஸ்பூன்,உப்பு தேவைக்கு ஏற்ப.  செய்முறை -ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் 3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன்கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.பிறகு முள்ளங்கி மற்றும் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.

Mar 28, 2025

சுரைக்காய் துவையல்.

தேவையானபொருட்கள்:1/2 சுரைக்காய்,2பச்சைமிளகாய்,சிறிதளவுகறிவேப்பிலை, சிறிதளவுமல்லித்தழை,உப்புதேவைக்கு ஏற்ப ,புளி சிறிதளவு,ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,1ஸ்பூன் கடுகு உளுந்து,1 ஸ்பூன் எண்ணெய். செய்முறை -கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,போட்டு தாளிக்கவும்.தோலை நீக்கி நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தோசை இட்லியுடன் பரிமாறவும்.மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

Mar 21, 2025

சேனைக் கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள் - பொடியாக நறுக்கிய சேனைத் துண்டுகள் – 2 கப்,தேங்காய் துருவல் – 1 கப்,மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன்,பூண்டு – 3 பற்கள்,உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு- தேவையான அளவு செய்முறை - முதலில் சேனைக் கிழங்கு, கறிவேப்பிலை உள்ளிட்ட பொருட்களை நறுக்கி வைத்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் சேர்த்து சேனைத் துண்டுகள் சேர்த்துசிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் வேகவைத்த சேனைக்கிழங்கு, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கலவையை அதனுடன் சேர்க்கவும். இப்போது எல்லாவற்றையும் கிளறி, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால் சுவையான சேனைக் கிழங்கு பொரியல் ரெடி. 

Mar 21, 2025

முள்ளங்கி பொரியல் .

தேவையான பொருட்கள் -  வெள்ளை முள்ளங்கி கால் கிலோ,வெங்காயம் 2,தக்காளி 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு,சோம்பு தலா அரை டீஸ்பூன்,உளுந்து 1 டீஸ்பூன்,பூண்டு 4 பல். செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய முள்ளங்கியை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நசுக்கி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு முள்ளங்கி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள். 

Mar 21, 2025

பப்பாளிக்காய் பொரியல்.

தேவையான பொருட்கள் - பப்பாளிக்காய் (சிறிய சைஸ்) 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, மலர வெந்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு,உப்பு தேவைக்கு. செய்முறை: பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Mar 21, 2025

காளான் மிளகுப் பொரியல்.

தேவையான பொருட்கள் - காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் -1 கப்,இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள்ஸ்பூன்,எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு,சீரகம் அரை டீஸ்பூன். செய்முறை:  காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் தூவி வதக்குங்கள். வதங்கியதும் காளானைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி மேலும் மூன்று நிமிடம் கிளறி இறக்குங்கள்.  சுவையான காளான் மிளகுப் பொரியல் ரெடி.

Mar 21, 2025

வாழைத்தண்டு பொரியல்.

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு -1, மோர் -1டம்ளர்,உப்பு - தேவையான அளவு, வெங்காயம் -10, கடுகு.உ பருப்பு - 1தேக்கரண்டி, தேங்காய் சில் – 2,கறிவேப்பிலை – கொஞ்சம்,ப.மிளகாய் - 2 ,வேகவைத்த பருப்புடன் கூடிய நீர் -1டம்ளர்செய்முறை - வாழைத்தண்டை, சிறு துண்டுகளாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கறிவேப்பிலை குச்சி அல்லது வேறு ஏதேனும் ஒரு குச்சியினால் வாழைத்தண்டை கிண்டிக் கொண்டேயிருக்க நார் முழுவதும் குச்சியில் சுற்றிக் கொள்ளவும். மோர் கலந்த தண்ணீர் அல்லது பருப்புடன் கூடிய தண்ணீரில் வாழைத்தண்டை வேக விடவும். நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன்உப்புப்போடவும் .வேறுஒருபாத்திரத்தில்எண்ணெய்விட்டுகடுகு.உளுந்தம்பருப்பு,வெங்காயம், மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும். தாளிதம் செய்ததை வாழைத் தண்டில் கொட்டி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி விடவும். வாழைத்தண்டு பொரியல் தயார்.

1 2 ... 39 40 41 42 43 44 45 ... 68 69

AD's



More News