கஸ்டர்டு சேமியா பாயாசம் .
தேவையான பொருட்கள்-
500மிலி பால், 2 டேபிள்ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்,1/2 கப்சர்க்கரை, 1/4 கப்சேமியா, 1/2 டீ ஸ்பூன் நெய்,
பாதாம், முந்திரி – சிறிதளவு
செய்முறை-
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சூடானதும் சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும் சேமியா பொன்னிறம் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் சிறிதளவு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பிறகு வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து கலந்து விடவும்.
சேமியா வெந்ததும் கஸ்டர்ட் மிக்ஸை சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். லேசாக கெட்டியாக வரும் போது இறக்கவும். கடைசியாக அதன் மேல் பாதாம் முந்திரி துண்டுகளுடன் அலங்கரித்து பரிமாறவும்.
0
Leave a Reply