25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில்,  (25.032026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடத்தி  வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், இராஜபாளையத்தில் உள்ள  பஞ்சு ஆலைகள், விருதுநகரில் உள்ள பேப்பர் கேப்ஸ் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News