25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையல்

Apr 11, 2025

அகத்திக்கீரை கூட்டு .

தேவையானவை :அகத்திக்கீரை - 1 கட்டு, பாசிப்பருப்பு - 50 கிராம் துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்-3 கடுகு-1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு , தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும் . பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும் கீரையானது நன்கு வெந்த பின் அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் அகத்திக்கீரை கூட்டு ரெடி!!

Apr 11, 2025

கோஸ் கூட்டு.

தேவையானவை:கோஸ் - 1 கப்,கடலை பருப்பு -1/2 கப், வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2,பெருங்காயம் – சிறிது,மஞ்சள் பொடி – சிறிது,கடுகு உளுந்து தாளிக்கசெய்முறை: கடலை பருப்பை மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து வேகவிடவும்.கோஸ் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வேக வைக்கும் அதனுடன் வெந்த கடலை பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .கடைசியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .இப்பொழுது கோஸ் கூட்டு ரெடி..

Apr 11, 2025

சௌ சௌ கூட்டு.

தேவையானவை:சௌ சௌ -1,வெங்காயம் – சிறிது,பச்சை மிளகாய் -2இஞ்சி – சிறிது,தக்காளி -1,பாசி பருப்பு - அரை கப்,உப்பு - சிறிது,கொத்தமல்லி இலை – சிறிது,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்கடுகு உளுந்து மற்றும் சீரகம் தாளிக்கசெய்முறை: சௌ சௌ வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்..அதனுடன் பாசி பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும். தேங்காயுடன் பச்சைமிளகாய் இஞ்சியும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.தேங்காய் விழுதை காயுடன் சேர்க்கவும் நன்கு வெந்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சேர்க்கவும்.கடைசியில் கொத்தமல்லியை சேர்க்கவும்.சௌ சௌ கூட்டு ரெடி.

Apr 04, 2025

சாட் மசாலா பொடி

தேவையானவை : சீரகம், தனி ஆம்ச்சூர் (மாங்காய் தூள் ) தூள், உப்பு தலா அரை கப், கருப்பு உப்பு, மிளகு தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 15. செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்றாக காயவைத்து நைஸாக அரைத்தெடுத்தால் அதுதான் சாட் மசாலா பொடி.இந்தப் பொடியை பழங்களின்மீது தூவி சாப்பிடலாம். தயிர் பச்சடியோடு கலந்து பரிமாறலாம். பேல் பூரி, பானி பூரி ,வகைகளிலும் உபயோகிக்கலாம். எதனோடு சேர்த்தாலும் சுவை தூக்கலாக இருக்கும்.

Apr 04, 2025

வேர்க்கடலை பொடி.

தேவையானவை : வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை 2 கப், மிளகாய் வற்றல் ஒண்ணே கால் கப், மலை பூண்டு2(முழுதாக), உப்பு தேவைக்கு.செய்முறை: மிளகாயை  வெறும் வாணலியில், மிதமான தீயில் வறுத்தெடுங்கள். ஆறியதும் அதனுடன் மற்ற  பொருட்களை கலந்து நைஸாக அரைத்தெடுங்கள்.இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து,சாதம்,இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டால் அபார  சுவை தரும். இதனை பதினைந்து நாட்கள் வரை  வைத்திருக்கலாம்.

Apr 04, 2025

எள் பொடி .

தேவையானவை : கருப்பு எள், உளுந்து தலா 1 கப், மிளகாய் வற்றல் 2 கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா கால் கப், உப்பு தேவைக்கு, பெருங்காயம் ஒரு துண்டு, எண்ணெய் 2 டீஸ்பூன்.செய்முறை : உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் ருப்பு   இவற்றை வெறும் வாணலியில் சிவக்க  வறுத்தெடுங்கள். எள்ளை (வெறும் வாணலியில்) மொறுமொறுப்பாக பொரித்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்து விட்டு, மீதமுள்ன எண்ணெயில் மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். வறுபட்ட பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்து வையுங்கள்.இந்த எள் பொடியோடு நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி,தோசைக்கு தொட்டுக் கொண்டால சுவையாக இருக்கும். புளியோதரையில்இந்தப்பொடியைசிறிதளவுதூவிகிளறினால்சுவையாகஇருக்கும்.எள்பொடியைஒருமாதம்வரைவைத்துஉபயோகிக்கலாம்

Apr 04, 2025

கொள்ளு பொடி .

தேவையானவை : கொள்ளு 1 கப்,உளுந்து அரை கப், மிளகாய் வற்றல்  25, பெருங்காயம்1 துண்டு, கொப்பரை துருவல்  கால் கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: கொள்ளை சுத்தம் செய்து வெறும்வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்தெடுத்துவிட்டு, மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் உளுந்தை வறுத்தெடுத்துவிட்டு, கடைசியில் தேங்காயைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.வறுபட்ட அனைத்தும் ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்தெடுங்கள்.இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து சாதம், இட்லி, தோசை வகைகளுக்குத் தொட்டுக்கொண்டால்,சுவை பிரமாதமாக இருக்கும்.

Apr 04, 2025

தேங்காய் பொடி.

தேவையானவை :கொப்பரை துருவல்1 கப், உளுந்துஅரை கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா கால் கப், பெருங்காயம் சிறு துண்டு, மிளகாய் வற்றல் 20, உப்பு தேவைக்கு, எண்ணெய்1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: தேங்காயை  வெறும் வாணலியில்  சிவக்க வறுத்தெடுங்கள். எண்ணெய் பெருங்காயத்தைப் பொரித்தெடுத்துவிட்டு  மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். மீதமாகும் எண்ணெயில் பருப்பு வகைகளை  ஒன்றாகப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து ஆறியதும் உப்பு சேர்த்து  கரகரப்பாக அரைத்தெடுங்கள்.இந்த தேங்காய்ப் பொடியுடன் நெய்  கலந்து சாதம்,இட்லி, தோசையோடு  சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொடியை பதினைந்து நாட்கள்  வரை வைத்திருக்கலாம்.

Apr 04, 2025

பூண்டு பொடி.

தேவையானவை : நாட்டு பூண்டு 50 பல்,உளுந்து 1 கப், துவரம் பருப்பு கால் கப், கடலைப் பருப்பு அரை கப், மிளகாய் வற்றல் 20, பெருங்காயம் 1 துண்டு, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை 5 ஆர்க்கு, உப்பு தேவைக்கு, எண்ணெய்ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன்எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து, மிளகாயை வறுத்தெடுங்கள். பிறகு பருப்பு வகைகளைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்துவிட்டு, தோல் நீக்கிய பூண்டு சேர்த்து, சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் புளியை மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு கறிவேப்பிலையை வறுத்தெடுங்கள். வறுபட்ட பொருட்கள் அனைத்தும் ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து உப்பு கலந்து நைஸாக அரைத்தெடுங்கள்.நல்லெண்ணெய் கலந்து சாதத்தோடு சாப்பிட சூப்பர் சுவை தரும் இந்த பொடியை பதினைந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

Mar 28, 2025

மாதுளம் பூ துவையல்!

தேவையான பொருட்கள்:மாதுளம் பூ  -- 2 கப் ,தேங்காய் துருவல் - 1 கப்,கறுப்பு உளுந்து - 2 தேக்கரண்டி, மிளகு, சீரகம்,இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்- தேவையான அளவு ,நல்லெண்ணெய்,உப்பு, தண்ணீர் - சிறிதளவு செய்முறை:வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், துண்டாக்கியபச்சை மிளகாய், மாதுளம் பூவை சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சத்துக்கள் நிறைந்த,'மாதுளம் பூ துவையல்' தயார்இட்லி, தோசைக்கு பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 68 69

AD's



More News