25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


கருப்பு கவுணி அரிசி – வெல்ல புட்டு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருப்பு கவுணி அரிசி – வெல்ல புட்டு

தேவையான பொருட்கள்-

1 கப் கவுணி அரிசி மாவு,3/4 கப்நாட்டு சக்கரை,

1/2 கப் தேங்காய். ,2 டேபிள்ஸ்பூன் நெய்,. 8-10 முந்திரி, 

1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,ஒரு சிட்டிகை உப்பு.

செய்முறை -

(கருப்பு கவுணி அரிசியை2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு)

 ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசைந்துக்கவும். 

கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.

ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும், இடியாப்ப தட்டில் பிசைநது வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து,15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்.

அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும், அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக்கவும்.

அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.

கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் ஆரோக்கியமான கருப்பு கவுணி அரிசி வெல்ல புட்டு தயார்.

சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி.இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News