காளான் புலவு
தேவையான பொருட்கள் :- காளான், 125 கிராம், வெங்காயம் 100 கிராம், இஞ்சி சிறுதுண்டு, முந்திரிப்பருப்பு 25 கிராம், பிரியாணி அரிசி கால் கிலோ, நல்லெண்ணெய் 100 கிராம், புதினா சிறிதளவு, பட்டை, கிராம்பு ஏலம் 2 கிராம்.
செய்முறை - காளானைச் சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும், முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, இஞ்சி வெங்காயம், புதினா போட்டு சிவக்க வறுத்த பின் பிரியாணி அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி 3 கப், தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். அரிசி வெந்து உதிரி உதிரியாக இருக்கும் சமயம் காளானைச் சேர்த்து மெதுவாகக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரியை அதில் போட்டு காளான் புலவைப் பரிமாறவும்.
0
Leave a Reply