ஃபிரைட் ரைஸ்
தேவையான பொருட்கள் :- பச்சரிசி அரை கிலோ, தக்காளி 300 கிராம், பச்சைப் பட்டாணி 1 கப், பெல்லாரி கால் கிலோ, பச்சை மிளகாய் 6, டால்டா 50 கிராம், ஏலக்காய் 3, கிராம்பு 4, பட்டை 4, இஞ்சி சிறுதுண்டு, பூண்டு 5 பல், உப்பு தேவையான அளவு.
செய்முறை - முதலில் அரிசியை கால்மணிநேரம், நீரில் ஊற வைத்து பின் நீரில்லாமல் வடிகட்டவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும், மிளகாயையும், நீளவாக்கில் நறுக்கவும். டால்டாவை ஊற்றி, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு சிவக்க வறுத்ததும். வெங்காயம், மிளகாய், பூண்டு, பட்டாணியைப் போட்டு வதக்க வேண்டும். பின் களைந்து வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிது வதக்கி தேவையான அளவு நீர் விடவும். 1 பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு நீர் விட வேண்டும். காய்கறி வேக வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. குருமா அல்லது சாலட் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
0
Leave a Reply