25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சமையல்

Jun 06, 2026

குடைமிளகாய் ஃப்ரை.

தேவையான பொருட்கள்:1 குடைமிளகாய்,1டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்,உப்பு,1டீஸ்பூன் சீரகம்,மஞ்சள்தூள்,எண்ணெய்.செய்முறை;ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் சேர்த்து அதனுடன்உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்.இது நன்கு வந்தங்கியதும், சப்பாத்தி, தோசை அல்லது தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம்.

Jun 06, 2026

குடமிளகாய் சட்னி.

தேவையான பொருட்கள்:2 கப் குடமிளகாய் (நறுக்கினது) , 1/2 கப்தக்காளி,1/4 கப் சின்ன வெங்காயம்,2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்,1டீ ஸ்பூன்கடுகு,2 ஸ்பூன்உ.பருப்பு , 3 ப.மிளகாய்2 சி.மிளகாய்,1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்,ருசிக்குகல் உப்பு,2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை.செய்முறை:கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், உ.பருப்பு, சி.மிளகாய், ப.மிளகாய் போட்டு வறுக்கவும்.பிறகு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கியதும், தக்காளி,குடமிளகாய், தேங்காய்போட்டு நன்கு வதக்கவும்.வதங்கியதும், உப்பு போட்டு, அடுப்பை நிறுத்தி விட்டு ஆற விடவும்.ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைக்கவும்.கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு,சி.மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத் தூள் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.இப்போது, சுவையான, சுலபமான,* குடமிளகாய் சட்னி* தயார்.இது, தோசை, இட்லிக்கு,ஆப்ட்டாக இருக்கும்.இது,உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி,தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது.

Jun 06, 2026

பேபிகான் குடமிளகாய் குருமா.

தேவையான பொருட்கள்:2 பெரிய வெங்காயம்,2தக்காளி,1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள்,4 சில் தேங்காய்,10 முந்திரி பருப்பு,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்,2 குடமிளகாய்சிறிதளவுமல்லி இலை,1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.செய்முறை: முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும்.வெங்காயம் குடமிளகாய்,பேபி கார்ன் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பேபிகார்ன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.தண்ணிரில் முந்தரிபருப்பை 5நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.ஊற வைத்தமுந்தரி பருப்பு அரைத்து கொள்ளவும்.மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ,அதில் வெங்காயம் சேர்த்து நன்றாகவதங்கியதும் ,அதில் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ,பச்சை வாடை போகும் வரைவதக்கவும்.அதில் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதங்கியதும்,நறுக்கியகுடமிளகாய் பேபி கார்ன் சேர்த்து ,நன்றாக வதங்கியதும், அதில் அரைத்த தேங்காய் விழுது,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது சுவையான பேபி கார்ன் குடமிளகாய் குருமா தயார்.

Jun 06, 2026

குடைமிளகாய் பஜ்ஜி.

தேவையான பொருட்கள்:1குடைமிளகாய்,2 கைப்பிடிகடலைமாவு,2 கைப்பிடி இட்லிமாவு,2 ஸ்பூன்மிளகாய் பொடி,உப்பு தேவையான அளவு .செய்முறை; ஒரு குடைமிளகாயை எடுத்துக்கொள்ளவும்.எடுத்த குடைமிளகாயை வட்டமாக வெட்டவும்.கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையானஅளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும்.பிசைந்து வைத்துள்ள மாவில் குடைமிளகாயை முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். குடைமிளகாய் பஜ்ஜி தயார்.

May 30, 2026

வெஜிடபுள் கட்லெட்

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து மசித்தது)கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)பீன்ஸ் - 6 முதல் 8 (பொடியாக நறுக்கியது)பச்சை பட்டாணி - 1/2 கப்வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிசோள மாவு (கார்ன் ஃபிளவர்) - 2 மேஜைக்கரண்டிபிரெட் தூள் (Bread crumbs) - 1 கப்கொத்தமல்லி தழை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுசெய்முறை-முதலில் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 2விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வதங்கிய வெங்காயத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் வேகவைத்தகாய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வேகவைத்து மசித்தஉருளைக்கிழங்கு, உப்பு மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்த்து மசிக்கவும். கலவைகெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.கைகள் சூடு ஆறியதும், அந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து உங்களுக்குப்பிடித்த வடிவில் (வட்டமாகவோ அல்லது நீளமாகவோ) தட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி சோள மாவு (Cornflour) மற்றும் சிறிதளவுதண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தட்டி வைத்துள்ளகட்லெட்டுகளை இந்த மாவில் முக்கி, பின்பு பிரெட் தூளில் (Breadcrumbs) புரட்டி எடுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கட்லெட்டுகளைப் போட்டு, இரண்டு பக்கமும்பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும் (ஷாலோ ஃப்ரை அல்லது டீப் ஃப்ரைசெய்யலாம்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான வெஜிடபிள் கட்லெட் தயார்! இதைதக்காளி சாஸ்(Tomato Ketchup) உடன் பரிமாறலாம்.

May 30, 2026

உருளை கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள்-உருளைக்கிழங்கு - 2 (பெரியது, வேகவைத்து மசித்தது)பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகரம் மசாலா - 1/4 தேக்கரண்டிபிரெட் தூள் (Bread crumbs) - 1/2 கப்சோள மாவு (Corn flour) - 1 மேஜைக்கரண்டிகொத்தமல்லி தழை - சிறிதுஉப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை-ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி மற்றும் உப்புஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, கைகளில் எண்ணெய் தடவிகட்லெட் வடிவமாக (வட்டமாகவோ அல்லது நீளமாகவோ) தட்டிக் கொள்ளவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குகரைத்துக் கொள்ளவும்.தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை சோள மாவு கலவையில் நனைத்து, பின்னர் பிரெட்தூளில் (Bread crumbs) புரட்டி எடுக்கவும். இது கட்லெட்டை மொறுமொறுப்பாக மாற்றும்.தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை மிதமான தீயில் வைத்து, இரண்டுபக்கமும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும். சுவையான உருளை கிழங்குகட்லெட் ரெடி. டீ, காஃபியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

May 30, 2026

வாழைப்பூ கட்லெட்

தேவையான பொருட்கள்-1 கப் வாழைப்பூ பொடியாக நறுக்கியது,2 உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அ) 1/2 டீஸ்பூன் மிளகு தூள்,1/4 டீஸ்பூன் சாட் மசாலா தூள்,1வெங்காயம் பொடியாக நறுக்கியது,1/4 டீஸ்பூன் சீரக தூள்,கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது,1/2 கப் சோள மாவு கரைசல்,1 கப் பிரட் தூள்,1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு எண்ணெய்.செய்முறை- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து சிலநிமிடங்கள் வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.வதக்கிய வாழைப்பூ உடன் மசித்த உ.கிழங்கு வெங்காயம்,ப.மிளகாய்,மல்லிஇலைசேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்.(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்து,உருண்டை போலவும் செய்யலாம்.)சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து ,பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம்பிரிட்ஜில் வைக்கவும்.1 table spoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு, சிறிதளவு மிளகுத்தூள்,சேர்த்து கரைத்து கொள்ளவும்.கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ,கட்லெட்டுகளை போட்டுபொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான வாழைப்பூ கடலெட் தயார்.

May 30, 2026

.பிராக்கோலி கட்லெட்.

தேவையான பொருட்கள்-1 ப்ரோக்கோலி, 2 உருளைக்கிழங்கு,1 வெங்காயம் பொடியாக நறுக்கியது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,1/2 டீஸ்பூன் சீரகத்தூள்,1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவுஉப்பு, சோள மாவு கரைசல்,பிரெட் தூள்,சிறிதளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது.செய்முறை -ப்ரோக்கோலியை சில நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும். வேக வைக்ககூடாது.பின் நன்றாக தண்ணீரை வடிகட்டி மசித்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.குக்கரில் 2-3 விசில் வரும் வரை உருளைக் கிழங்கினை நன்றாக வேகவிடவும்.பின் நன்றாகமசித்து எடுத்து கொள்ளவும்.மசித்த ப்ரோக்கோலி மற்றும் உ.கிழங்கு வெங்காயம்,ப.மிளகாய்,மல்லிஇலைசேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். தேவையான அளவு உப்புசேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்.(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்துஉருண்டை போலவும் செய்யலாம்.)சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம்பிரிட்ஜில் வைக்கவும்..(1 table spoon) சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள்சேர்த்து கரைத்து கொள்ளவும்.)தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை வைக்கவும்.பொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி கடலெட்தயார். சூடாக பரிமாறவும்.

May 30, 2026

சேமியா கட்லெட்.

தேவையான பொருட்கள்--4 உருளை கிழங்கு ,1 கப்வறுத்த சேமியா,1 கப் கார்ன்பிளவர்மாவு,தேவையான அளவு உப்பு,மல்லி தழைய நறுக்கியது ,1ஸ்பூன்சில்லிப்ளக்ஸ்,1 ஸ்பூன்மிளகுதூள் , தேவையான அளவு எண்ணெய் பொரிக்க.செய்முறை உருளைக்கிழங்கைஅவித்துமசித்துக்கொள்ளவும்.அதில்சில்லிப்ளக்ஸ்,மிளகுதூள்,உப்பு,மல்லிதழைநறுக்கியது,கார்ன்ப்ளவர்மாவு,2ஸ்பூன்சேர்த்துநன்குபிசைந்துகட்லெட்போல்பிடித்தடிசைனில்செய்துகொள்ளவும்.பின்ஒருபாத்திரத்தில்கார்ன்ப்ளவர்மாவு+தண்ணீர்,உப்பு,சேர்த்துகட்லெட்'டிப்'பண்ணுகிறபதத்தில்கலந்துவைத்துக்கொள்ளவும்.வறுத்தசேமியாவைதனியாகஒருதட்டில்லேசாகநொறுக்கிவைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய்விட்டுகாய்ந்ததும் உருளைகிழங்கு கட்லெட்டைஎடுத்துகார்ன்பிளவர் மாவு கலவையில் முக்கி பின் சேமியாவில் புரட்டி அப்படியே எண்ணெயில்போட்டு பொன் நிறமானதும் எடுக்கவும். எளிமையான கட்லெட். குழந்தைகளுக்குரொம்பபிடிக்கும். டீ உடன் சேர்த்து சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ்.

May 30, 2026

.பனீர் கட்லெட்

தேவையான பொருட்கள் -பனீர்: 200 கிராம் (துருவியது)உருளைக்கிழங்கு: 2 (வேகவைத்து, மசித்தது)வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)கேரட்: 1/2 கப் (துருவியது)பச்சை மிளகாய்: 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது: 1 தேக்கரண்டிமசாலா தூள்: மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா 1/2தேக்கரண்டிகான்ஃபிளார் மாவு: 2 மேஜைக்கரண்டி (ஒட்டுவதற்கு)பிரெட் தூள் (Breadcrumbs): 1/2 கப்கொத்தமல்லி தழை: சிறிதளவுஎண்ணெய் மற்றும் உப்பு: தேவையான அளவு .செய்முறைஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.இதனுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான மசாலாப்பொருட்கள் (மஞ்சள், மிளகாய், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு) சேர்த்து குறைந்த தீயில் 2நிமிடங்கள் வதக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு, மசாலா கலவை ஆறியவுடன் துருவிய பனீர் மற்றும் கொத்தமல்லிஇலைகளை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.இந்தக் கலவையில் இருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, உங்களுக்கு பிடித்தமானவடிவத்தில் (வட்டமாகவோ அல்லது தட்டையாகவோ) தட்டி வைத்துக் கொள்ளவும்.கான்ஃபிளார் மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். கட்லெட்களை இந்தமாவில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்களைப் போட்டு மிதமான தீயில்பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான மொறுமொறுப்பான பனீர் கட்லெட் தயார். இதனை தக்காளி சாஸ் (Tomato Ketchup)அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 70 71

AD's



More News