பீர்க்கங்காய் தோல் சட்னி
தேவையான பொருட்கள் பிஞ்சு பீர்க்கங்காய் தோல் (பொடியாக நறுக்கியது) 1 கப், தேங்காய்த் துருவல் கால்கப், மல்லித்தழை 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கடுகு 1 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, புளி சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு பீர்க்கைத் தோலைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாடை நீங்கியதும் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். கடைசியாக மல்லித்தழை, புளி, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். குழிப் பணியாரம், சாதம், இட்லி, தோசைகளுக்கு ஏற்றது பீர்க்கங்காய் தோல் சட்னி.
0
Leave a Reply