தேவையான பொருட்கள்: உதிர்த்த இடியாப்பம் - 1 கப்தக்காளி-1பெரிய வெங்காயம்- 1இஞ்சி - சிறுதுண்டுபூண்டு - 2 பல்பச்சை மிளகாய்-2தேங்காய்- சிறுதுண்டுதாளிக்க - பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, கறிவேப்பிலைஎண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன்எலுமிச்சம்பழம் - அரை மூடி. செய்முறை:தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றை லேசாக நீர்தெளித்து, மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியை மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிரிஞ்சி இலை,சோம்பு, பட்டை போட்டு. வெடித்தவுடன் கறிவேப்பிலையைப் போடவும்.அரைத்த விழுதைப் போட்டு, வாசம் போகும் வரை இளந்தீயில் கிண்டவும்.நன்கு வெந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கிண்டுங்கள்.விழுது போல எல்லாம் சேர்ந்து வெந்தபின், இடியாப்பத்தைக் கொட்டிநெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக எலுமிச்சம்பழத்தைப்பிழிந்துவிட்டு கிளறி உபயோகிக்கலாம்.இது வெங்காய தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட்டால் பிரியாணி போலஇருக்கும். விரும்பினால் கேரட், பட்டாணி, காலிபிளவரை சிறுதுண்டுகளாக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து கலந்துகொள்ளலாம்.வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:மேல் மாவுக்கு...கோதுமை மாவு - 2 கப்எண்ணெய் 2 டீஸ்பூன்கருஞ்சீரகம் - சிறிதளவுஎண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவுஉப்பு -தேவைக்கேற்பஸ்டபிங் செய்ய...பொட்டுக்கடலை - 1 கப்பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தலா 1 டீஸ்பூன்சீரகம் ஓமம், தலா கால் டீஸ்பூன்உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்பகொத்தமல்லித் தழை- சிறிதளவு.செய்முறை:மேல்மாவுக்கு, கொடுத்துள்ள பொருள்களில் தேவையான தண்ணீர்விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.பொட்டுக்கடலையைச் சுத்தம் செய்து, அதில் பச்சை மிளகாய்,கொத்தமல்லி, சீரகம், ஓமம், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்சியில் நன்குபொடித்துக் கொள்ளவும்.கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து, பொடித்துவைத்துள்ளதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக்கி, செப்பு மாதிரிச் செய்து நடுவில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து இழுத்து மூடி,சப்பாத்தியாகத் தேய்த்து, தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள்-ஒரு கப் கோதுமை மாவு,ஒரு கப் சர்க்கரை,தண்ணீர் தேவையான அளவு ,மாவு பிசைய தேவையான காய்ச்சி ஆற வைத்த பால்,ஒரு ஸ்பூன் நெய்,ஏலக்காய்பொடி சிறிதளவு ,எண்ணெய் தேவையான அளவு.செய்முறை:முதலில் கோதுமை மாவை நெய்விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.பின் அந்த மாவில் சிறிது நெய் மற்றும் பால் கலந்து சப்பாத்திமாவு பதத்தில்பிசைந்துகொள்ள வேண்டும்.கலவையை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில்பொரித்தெடுக்கவும்.சர்க்கரை பாகு:1 கப் கோதுமை மாவு எடுத்துக்கொண்டால் 1 கப் சர்க்கரை 2 கப்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.பொரித்தெடுத்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்க்கவும்.கோதுமை குலோப்ஜாமுன் தயார்.
தேவையான பொருட்கள்:பச்சரிசி -1 கப்புழுங்கல் அரிசி - 1 கப்உளுந்தம் பருப்பு - அரை கப்துண்டாக்கிய பிரண்டை - அரை கப்வெந்தயம், எண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில்மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பிரண்டையை சேர்த்துநன்கு அரைத்து மாவாக்கவும். அதில் உப்பு சேர்த்து, எட்டு மணி நேரம்புளிக்க விடவும். பின், தோசையாக வார்த்தெடுக்கவும்.சுவை மிக்க, 'பிரண்டை தோசை!' தயார். சட்னி தொட்டு சாப்பிடலாம்.வித்தியாசமான சுவையுடன் இருக்கும். பசியைத் தூண்டும். தொடர்ந்து ,சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
தேவையான பொருட்கள்:சர்க்கரைவள்ளி கிழங்கு- 250 கிராம்புட்டு மாவு - 250 கிராம்தேங்காய் துருவல் - 1 கப்சர்க்கரை, நெய் - தலா 4 தேக்கரண்டிதண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். புட்டுமாவுடன் சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து வேக வைத்து உதிர்த்தசர்க்கரைவள்ளி கிழங்குடன் கலக்கவும். இதில், தேங்காய் துருவல்,சர்க்கரை, நெய் சேர்க்கவும்.சுவைமிக்க, 'சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள் -1 கப்வரகு அரிசி,1/2 கப்சாமை அரிசி,1 கப்குதிரை வாலி அரிசி,1/2 கப்தினை அரிசி,1 கப்இட்லி அரிசி,1 கப்உளுத்தம்பருப்பு,1ஸ்பூன்வெந்தயம்,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்.செய்முறை:வரகு,தினை, சாமை, குதிரை வாலி அரிசி , இவைகளை நன்றாக கழுவி சுத்தம்செய்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.உளுத்தம்பருப்புபை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனுடன் வெந்தயம் சேர்த்து நன்றாக ஊற விடவும்.நன்றாக ஊறிய பின் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்து எட்டு மணி நேரம்புளிக்க வைத்து, பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.எப்பொழுதும் நாம் சாப்பிடும் இட்லி போல் இருக்கும். தோசையும் செய்யமுடியும். இந்த மாவில் சுவையாக இருக்கும். இட்லி பஞ்சு போல் இருக்கும்.நான்குக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து அரைத்து எடுக்கவும்.உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானியஇட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும்.
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்ஆப்பிள் - 1 (தோல் நீக்கி துருவியது),நாட்டுச்சர்க்கரை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்,முட்டை - 1,பால் - 3/4 கப் (தேவைக்கேற்ப),உப்பு - 1 சிட்டிகை,நெய் - சுடுவதற்கு தேவையான அளவு, செய்முறை:ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய ஆப்பிள், நாட்டுச்சர்க்கரை மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.அதனுடன் முட்டையை உடைத்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.பாலை சிறிது சிறிதாக ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.பேனை சூடாக்கி, சிறிதளவு நெய் தடவவும். மாவை ஒரு கரண்டி எடுத்து தடிமனாக ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் நன்றாகச் சுட்டு எடுக்கவும். மென்மையான, சத்தான ஆப்பிள் பேன்கேக் தயார்.
தேவையான பொருட்கள் -1 கப் மைதா மாவு,2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை,2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்,2 டேபிள்ஸ்பூன் மசித்த வாழைப்பழம்,1 முட்டை.செய்முறை -மைதா மாவு சக்கரை பால் பவுடர் மசித்து வைத்த வாழைப்பழம் மற்றும் முட்டை சேர்த்து நன்கு விஸ்க் வைத்து கலக்கவும்.கேக் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பேட்டர் செய்யவும்.வெண்ணெய் தடவிய பேனில் ஒரு கரண்டி ஊற்றி மூடி வைத்து, இரண்டு பக்கமும் வேகவைக்கவும். சாக்லேட் சிரப் தேன் மற்றும் பழங்கள் வைத்து பரிமாறவும். சுவையான வாழைப்பழம் பேன் கேக் தயார்.குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம்.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்- 1 அல்லது 2முட்டை,1 கப்மைதா மாவு,1வாழைப்பழம்,2 மேசைக்கரண்டிசர்க்கரை,ஒரு சிட்டிகை உப்பு,ஒரு சிட்டிகைசோடா உப்பு,1/2 ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்,2 மேசைக்கரண்டி எண்ணெய்.செய்முறை- முதலில் மிக்ஸியில் வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.இதில் உப்பு, சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இந்த அடித்த கலவையில் மைதா மாவு சேர்த்து ,கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் தடவி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும். சுவையான எக் பேன் கேக் தயார்.
தேவையான பொருட்கள்- 1 கப் ராகி மாவு,வெல்லம் தேவையான அளவு ,1-2வாழைப்பழம்,1/2டீஸ்பூன் ஏலக்காய்தூள்.செய்முறை -முதலில் கடாயில் ராகி மாவினை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின்னர் ஆற வைத்து பாத்திரத்தில் போடவும்.அதனுடன் வாழைப்பழம், வெல்லம் அல்லது பாகு காய்ச்சிய வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, நன்றாக மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இதனுடன் சிறிது பின்ச் சுக்கு பொடி சேர்த்தும் கொள்ளலாம்.தோசை கல் சூடானவுடன் ,மாவினை ஊற்றி தோசை போல நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வெந்ததும், அடுப்பினை அணைத்து விடவும்.சுவையான ராகி பேன்கேக் தயார்.