70 வயதிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நெல்லிக்காய்வெள்ளரி ஜூஸ்
உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும்போதுதான் நோய்கள் உண்டாகும்.சருமம் பொலிவிழக்கும். இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படும். கடுமையானமுடி உதிர்வு பிரச்னைகள் உருவாகும். மலச்சிக்கல்பிரச்னை அதிகமாகும். ரத்தம் சுத்தமாக குறையும்.
நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். இளநரை பிரச்னையை சரிசெய்யும். முதுநரையை தள்ளிப்போடும். இதில் உள்ள வெள்ளரி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கும்.ரத்தத்தை சுத்தம் செய்யும். நமது உடலில் புதிய ரத்தம் ஊறத்துவங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கல்லீரல், மண்ணீரலில் உள்ள கழிவை வெளியேற்றும். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.இதற்கு பயன்படுத்தப்படும்பொருட்களில், அதிகளவில் வைட்டமின் ஏ, சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட எண்ணற்றவைட்டமின்களும், மினரல்களும் உள்ளது.
. தேவையானபொருட்கள் நெல்லிக்காய்-2, வெள்ளரி அரை, இஞ்சி அரை இன்ச்(அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்துவிடலாம்), மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, புதினா- சிறிதளவு, எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் (அல்சர் உள்ளவர்கள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்)நாம் அன்றாட உணவில் இதில் சேர்த்துள்ள 3 இலைகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
செய்முறை
எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.
இந்த சாறில் மிளகை சேர்த்து சாப்பிடும்போது இதன் மருத்துவ பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மிளகு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இளநரையும் மறையும். எனவே வாரத்தில் ஒரு நாள் உணவில் மிளகை இதுபோல் பொடி செய்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும். சருமம் பளபளப்பாகும். ரத்தம் சுத்திகரிப்பாகும். உடல் சுறுசுறுப்பாகும். கல்லீரல்லில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நீர்ச்சத்து கிடைக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்குநல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி.
0
Leave a Reply